தெரிந்த பெயர், தெரியாத விவரம்: வாலாஜா ஏரி

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: வாலாஜா ஏரி

கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. இதன் பரப்பளவு 1,664 ஏக்கர்.

17-ஆம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகம்மது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார். இவர் விருப்பத்தின் பேரில்தான் ஆங்கிலேயர் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர்.

கி.பி.1825 முதல் 1855 வரை 13-ஆவது நவாப்பாக ஆட்சிக்கு வந்த முகம்மது கவுஸ்கான் வாரிசு இன்றி இறந்ததால் ஆட்சி ஆங்கிலேயர் வசம் சென்றது. அதேசமயம் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு 1780-இல் கடலூர் நகரம் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு 1783-இல் நடந்த கடலூர் போரில் ஆங்கிலேயர்  இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம். ஆனால் வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் காரணமாக மக்கள் இந்த ஏரியை  "வாலாஜா ஏரி' என்று அழைத்திருக்கலாம்.
- தங்க. சங்கரபாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com