வலையில் பிடித்தது...

வலையில் பிடித்தது...

முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மீண்டும் மீண்டும் தலைகாட்டல் முட்டாள்தனமானது!

ஃபேஸ்புக்
* முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மீண்டும் மீண்டும் தலைகாட்டல் முட்டாள்தனமானது!
ட்விட்டர்
• முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..
வாட்ஸ் அப்
• நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விஷயங்கள்: நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது..... 
நம்மோட பொறுமை..!
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது..... நம்மோட நடத்தை..!
• "டேய்..ஓடாதே.. நில்ரா.. எதுக்குடா  இவளை தூக்கிட்டு ஓடறே ?''
"நீங்கதானே சார் சொன்னீங்க. விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால, ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு'' 
• என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா...
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு?'
"(ஆத்தி இடியாப்பமா இது) சூப்பர் செல்லம்!
• மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : ஏற்கெனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com