பாருங்கள்... ரசியுங்கள்...

வடக்கில் திபெத்தையும் தென்மேற்கே பூட்டானையும் எல்லையாகக் கொண்ட பகுதி தவாங்!
பாருங்கள்... ரசியுங்கள்...

வடக்கில் திபெத்தையும் தென்மேற்கே பூட்டானையும் எல்லையாகக் கொண்ட பகுதி தவாங்!
அருணாசல பிரதேச மாநிலத்தில்  தவாங் அமைந்துள்ளது. இதன் உயரம் 10,000 அடி. அஸ்ஸாமிலிருந்து, தேஜ்பூரில் பயணத்தை சாலை வழியாகத் தொடங்கினால் 320 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கௌஹாத்தியிலிருந்து 555 கிலோ மீட்டர்!
 கல்கத்தாவிலிருந்து வாரம் இருமுறை ஹெலிகாப்டர் வசதி உண்டு.
 அஸ்ஸாம் தேஜ்பூர் பகுதியிலிருந்து வரும்போது செலாபாஸ் (13701 அடி) வழியாக ஏறி இறங்கி தவாங்கை அடைய வேண்டும்.
 புத்த மதத்தினருக்கு மிகவும் புனித ஊர். வருடம் முழுவதும் வருகின்றனர்.
 5-ஆவது தலாய்லாமாதான் தவாங்கைத் தேர்ந்தெடுத்து மிகப்பெரிய புத்த துறவிகள் மடத்தை ஸ்தாபிக்க உத்தரவிட்டுள்ளார்.
 6-ஆவது தலாய்லாமா இங்குதான் பிறந்தார்.
 14-ஆவது இன்றைய தலாய்லாமா சீன கெடுபிடிகளுக்கு பயந்து, திபெத்திலிருந்து தப்பித்தபோது, 1959-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இங்குதான் இருந்தார்...! பிறகு அஸ்ஸாம் தேஜ்பூர் சென்றார்.
 2009-இல் மீண்டும் தலாய்லாமா இங்கு வந்தபோது, அருணாசல பிரதேசமே திபெத்தின் ஒரு பகுதி என்றார்! இன்று எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது!
 1962-இல் இந்திய சீன யுத்தம் நடந்தபோது, சீனர்கள் தவாங் வரை, இந்திய எல்லைக்குள் வந்தனர். பிறகு சமாதான ஒப்பந்தம் வந்த போது திரும்பிச் 
சென்றனர்.
 ஆனால் இன்றும் தவாங்கை தங்களுடைய தென் திபெத்தின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது. 2017 ஏப்ரலில் அது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தென் திபேத் (சீன பகுதி)தின் 6 இடங்களில் தவாங்கும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதனால் தவாங் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் இஷ்டப்படி சுற்ற இயலாது. முன் அனுமதி பெற வேண்டும்!
 தவாங்கை, டாக்சியில் சுற்றிப் பார்க்க அரைநாள் போதும்.
 இயற்கை கொஞ்சும் பூமி. குறுகிய பள்ளத்தாக்கு பகுதிகளும் உண்டு. கண்களைக் கவரும் ஏரிகள் உண்டு. இவை மழைகாலத்தில் நிறைந்திருக்கும். குளிர்காலத்தில் உறைந்திருக்கும்..! பனி படர்ந்த மலைகளைக் கொண்ட பூமி... அருமையான தட்பவெப்ப நிலை நிலவும்..!
 இங்கு யுத்த நினைவு சின்னம் உள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
 புத்தமத புது வருடப்பிறப்பு மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாக்கள் மிகவும் 
சிறப்பானவை.
 இந்தப் பகுதியை ""மேன்பாஸ் மக்களின் பூமி'' என அழைக்கின்றனர். காரணம் இங்கு மலைப் பிரதேசங்களில் காலம் காலமாய் மேன்பாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 தவாங்கிற்கு, குதிரை கண்டுபிடித்த பூமி எனவும் செல்லப் பெயருண்டு.
 இங்கு அசைவ உணவு கிடைக்கவே கிடைக்காது.
 வெயில் காலத்தில், உலகின் பல இடங்களிலிருந்தும் பல வகையான பறவைகள் குவிவது கண்கொள்ளாக் காட்சி! மலை ஏறுபவர்களுக்கு சொர்க்க பூமி இது..!!
-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com