தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்ட்ரல் ரயில் நிலையம்!

ரோமன் கட்டடக் கலையின் பிதாமகரான ஜார்ஜ் ஹாரிங் என்ற ஆங்கிலேயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வடிவமைத்தார்.
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சென்ட்ரல் ரயில் நிலையம்!

ரோமன் கட்டடக் கலையின் பிதாமகரான ஜார்ஜ் ஹாரிங் என்ற ஆங்கிலேயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வடிவமைத்தார். சென்ட்ரல் ரயில் நிலையம் ஏப்ரல் 7 ஆம் தேதி  1873 ஆம் ஆண்டு பொதுமக்கள் மற்றும் வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஆங்கிலேயர் கொண்டு வந்தனர்.  சென்ட்ரலின் உச்சியிலுள்ள பிரம்மாண்ட கடிகாரம் ராபர்ட் பெஃலோஸ் கிறிஸ்ஹோம் என்பவரால்  வடிவமைக்கப்பட்டது. பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கு நோக்கி  செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப் பட்டுச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டிருந்தது. அப்படித்தான்  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் விரிவாக்கமடைய தொடங்கியது.

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், தெற்கில் கேரளம், ஆந்திரம், கர்நாடகத்துக்கும் விரைவு மற்றும் மெயில்களும் இயக்கப்படுகின்றன.

* தினமும் 2 லட்சம் பேர் சென்ட்ரலில் இருந்து வெளியூருக்கும், வெளியூர்களில் இருந்தும் சென்ட்ரலுக்கும் வருகை தருகின்றனர். மேலும் சென்னை புறநகர் ரயில் சேவையை தினமும் 2.5 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மருந்தகம் இருந்தது. இப்போது மருந்தகம் இல்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் அவசர மருத்துவ உதவி மையம் இப்போது செயல்படுகிறது. 

* சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரி அறை, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் அலுவலகம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு அலுவலகம் ஆகியவை உள்ளன.

• சென்னை சென்ட்ரலில் இருந்து நாள் ஒன்றுக்கு 47 ஜோடி விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

• 12 நடைமேடைகள், 9 ஏசி ஓய்வு அறைகளும், 2 சாதாரண ஓய்வு அறைகளும் உள்ளன.

• முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக இலவச சேவையாக 15 சக்கர நாற்காளிகளும் , 2 பேட்டரி கார்களும் இயக்கப்படுகின்றன.

• சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் தண்டையார்பேட்டை மற்றும் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு பராமரிப்புக்காக செல்கின்றன.

• ஏராளமான பார்சல்கள் விரைவு ரயில்களில் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் அழுகும் பொருட்கள், அழுகாத பொருட்கள் என பிரிக்கப்படுகின்றன. இதில் பத்திரிகைகள் தொடங்கி பைக்குகள், சைக்கிள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், இறைச்சிகள் ஆகியவை அனுப்பப்படுகின்றன.

• சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு ரயில் சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மற்றும் சென்னை கடற்கரை மார்க்கமாக செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் நின்று செல்லும் ரயில்கள் : 38 - புறப்படும் விரைவு, மெயில் ரயில்கள் : 79  - சென்னை சென்ட்ரலுடன் 
முடிவடையும் ரயில்கள் : 78
- ஜெகதீஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com