நல்ல படங்களை ஆதரியுங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் "2.0'. துபையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.
நல்ல படங்களை ஆதரியுங்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் "2.0'. துபையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளுக்குமான பாடல்கள் இதில் வெளியிடப்பட்டன.
இதில் தொகுப்பாளர்கள் சில கேள்விகளை ரஜினியின் முன் வைத்தார்கள். இதில் ரஜினி பேசும் போது... ""இந்த 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. எனக்கு ஏதோ 4}5 ஆண்டுகள் மாதிரி தான் இருக்கிறது. அதற்கு கண்டிப்பாக ஆண்டவனின் அருள், மக்களுடைய அன்பு தான் முக்கிய காரணம். பணம், பெயர், புகழ் அனைத்துமே மற்றவர்கள் பார்ப்பதற்குத் தான். ஓரளவுக்கு மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும். அவை அனைத்துமே தொடக்க நாட்களில் மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும். பிறகு சந்தோஷத்தைக் கொடுக்காது. அனைத்துமே இருக்கும்போது சந்தோஷத்தைக் கொடுக்காது, இல்லாமல் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும். ரொம்ப வேடிக்கையான விஷயம் அது. ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருந்தால் கடினமாக இருந்திருக்கும். ஆனால், நம்பிக்கையிருப்பதால் ரொம்ப சுலபமாக இருக்கிறது. நல்ல படங்களை ஆதரியுங்கள். நன்றாக இருந்தால் கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். சுமாராக இருந்தால் கூட சமூகவலைத்தளங்களை உபயோகித்து, மற்றவர்களின் மனதை நோகடிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்'' என்று பேசினார் ரஜினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com