எறும்பு புற்றில் இருந்து உருவான கந்தசுவாமி!

சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசுவாமி (முருகர்) கோயில், சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று. 
எறும்பு புற்றில் இருந்து உருவான கந்தசுவாமி!

சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசுவாமி (முருகர்) கோயில், சிறந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்று. 
முருகப் பெருமானின் பக்தர்களான மாரி செட்டியும் கந்த பண்டாரமும் ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரம் தோறும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள திருப்போரூர்
முருகன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். கடந்த 1932-ஆம் ஆண்டில், திருப்போரூக்குச் சென்ற அவர்கள் இருவரும் ஒரு மரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுத்தனர். அப்போது, திருப்போரூர் குளத்துக்கு அருகே உள்ள எறும்பு புற்றுக்குள் முருகன் விக்ரகம் ஒன்று இருப்பதாகவும், அதைத் தேடியெடுத்து சென்னை நகரில் கோயில் கட்டுமாறும் தெய்வ வாக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து, முருகன் விக்ரகத்தைத் தேடியெடுத்த அந்த பக்தர்கள், சென்னை பூங்கா நகரில் கந்தசுவாமி கோயிலைக் கட்டினர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து காணப்பட்ட இந்தக் கோயிலை, மீண்டும் புதுப்பித்தனர்.
திருப்போரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட முக்கிய விக்ரகம் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கந்தசுவாமி என வழிபடப்படுகிறது. இரண்டு அடி உயர கந்தசுவாமி விக்ரகத்தின் இரு புறங்களிலும் வள்ளியும், தெய்வானையும் வீற்றிருக்கின்றனர்.
கந்தசுவாமி விக்ரகத்தின் மேலிரு கரங்களில் வஜ்ர சக்தி, சூல சக்தி ஆகிய ஆயுதங்களைத் தாங்கியபடியும், கீழ் வலது கரம் பக்தர்களுக்கு அருள் பாலித்தபடியும், கீழ் இடது கரம் இடுப்பில் கை வைத்தபடியும் காட்சியளிக்கின்றன. கோயிலின் முன் மண்டபத்தில் விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்றான ஹேரம்ப கணபதி, ஊர்த்துவ தாண்டவம் (ஒரு காலை செங்குத்தாகத் தூக்கிய நிலை) செய்யும் சிவபெருமான், பார்வதியை சிவன் திருமணம் செய்யும் கல்யாண சுந்தரர் சிலை ஆகியவை வீற்றிருக்கின்றன.
இக்கோயிலின் உற்சவ மூர்த்தியான வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி, மிகப்பெரிய உற்சவ மண்டபத்தின் முன்பு தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கோயில் குளமான "சரவணப் பொய்கை'யின் அருகிலேயே குளக்கரை விநாயகர், தன் மனைவியரான சித்தி, புத்தியுடன் வீற்றிருக்கிறார். மற்றொரு புறத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் வீற்றிருக்கிறார்.
ஆண்டு திருவிழா: தை மாதத்தில் 18 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவம்.
பிரத்யேக வழிபாடு: முத்துக்குமார சுவாமிக்கு ஆண்டில் 9 முறை மட்டுமே அபிஷேகங்கள் நடக்கும்.
முக்கிய கொண்டாட்டம்: தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வரும் கந்த சஷ்டி நாள்.
அமைவிடம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மிக அருகிலேயே ராசப்பன் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் , கோயில் 
- சிற்பங்கள் ஆராய்ச்சியாளர்.
தமிழில்: பிரவீண் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com