ஐந்து பேர் ஐந்து செய்தி

ஐந்து பேர் ஐந்து செய்தி

தமிழின் முக்கியமான இயக்குநர்களான பாரதிராஜாவும், மகேந்திரனும் ஓய்வான நேரங்களில் தனியார் திரைப்படக் கல்லூரியில் பாடம் நடத்துகின்றனர்.

• "பத்ம விபூஷண்' இளையராஜா, திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். ரசிகர் கூட்டத்தைத் தவிர்க்க அதிகாலையில் செல்கிறார்.

• திருவள்ளுவருக்கு அடுத்து அதிக மொழிகளில் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி. இதுவரை இவரது நாவல்கள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

• தமிழின் முக்கியமான இயக்குநர்களான பாரதிராஜாவும், மகேந்திரனும் ஓய்வான நேரங்களில் தனியார் திரைப்படக் கல்லூரியில் பாடம் நடத்துகின்றனர்.

• நடிகர் மாதவன், தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக 2007-ஆம் ஆண்டு எழுதிக்கொடுத்துவிட்டார். இப்படி தானம் செய்வதன் மூலம் ஐந்து பேரை வாழ வைக்க முடியும் எனக் கூறுகிறார்.

• மறைந்த எழுத்தாளர் ஞாநியின் நினைவாக ஒரு புத்தகத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவரது மொத்த ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் அந்தப் புத்தகம் இருக்கும் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com