தொடரும் "இம்சை அரசன்' சர்ச்சை

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் "இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு வேகமாகத் தொடங்கப்பட்டது
தொடரும் "இம்சை அரசன்' சர்ச்சை

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் "இம்சை அரசன் 24}ம் புலிகேசி'. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு வேகமாகத் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
 இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர, விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்கள்.
 இதன் படப்பிடிப்பிற்காக போடப்பட்டுள்ள அரங்குகளும் அப்படியே இருப்பதால், தினமும் படக்குழுவினருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 இது குறித்து விசாரித்தபோது, ""வடிவேலு இதுகுறித்து விளக்கம் அளிக்காமலேயே இருந்து வருகிறார்.
 அவர் வந்து விளக்கமளித்தால் தானே ஒரு முடிவுக்கு வர முடியும். எங்கள் நோக்கம், அவர் மீது புகார் அளிப்பது அல்ல. விரைவில் வடிவேலு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்பதே'' என்று வேதனையுடன் தெரிவிக்கிறது படக்குழு.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com