கௌரி லங்கேஷ் கதையில் நித்யாமேனன்

கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பத்தை தழுவி, "பிரனா' என்ற பெயரில் 4 மொழிகளில் படம் உருவாகவுள்ளது.
கௌரி லங்கேஷ் கதையில் நித்யாமேனன்

கடந்த ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பத்தை தழுவி, "பிரனா' என்ற பெயரில் 4 மொழிகளில் படம் உருவாகவுள்ளது. எழுத்தாளர் வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். "இது கெüரி லங்கேஷ் கதையா?' என்ற கேள்விக்கு நித்யாமேனன் பதிலளித்துள்ளார். ""பிரனா' படம் 4 மொழிகளில் உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக 4 முறை நடிக்க வேண்டி இருப்பதால், மிகுந்த சிரமமாக உள்ளது. இது போல் வேறு யாரும் நடித்துள்ளார்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக கொண்டு இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கெüரி லங்கேஷ் வாழ்க்கை பாணியிலான கதை என்றாலும், அவர் கொல்லப்படுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே இக்கதை தயார் செய்யப்பட்டு விட்டது. அதற்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு இல்லை. சகிப்புத்தன்மை இல்லாமல் போனதுதான், இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது. மக்கள் தங்களது எண்ணங்களை எந்தவித பயமும் இல்லாமல் வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. அதற்காக கண்டபடி எழுதலாம் என்று கூறவில்லை. உண்மை என்ன என்பதை ஒருவர் வெளிப்படுத்த முயலும் போது தாங்கள் மிரட்டப்படுவோம் என்று அவர்கள் பயப்படக்கூடாது. அது போன்ற சூழல் உருவாக வேண்டும் என இந்தப் படம் வலியுறுத்தும்'' என்றார் நித்யாமேனன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com