கடவுள் உண்டு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை ஒருமுறை நான்கு கல்லூரி மாணவிகள் சந்தித்தனர். அவர்கள், கவிமணியிடம் தமிழ் இலக்கியம், கடவுள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
கடவுள் உண்டு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை ஒருமுறை நான்கு கல்லூரி மாணவிகள் சந்தித்தனர். அவர்கள், கவிமணியிடம் தமிழ் இலக்கியம், கடவுள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். கடவுள் குறித்து கவிமணி சொன்ன விளக்கம்: "கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய முக்கடல்கள் ஒன்றாகக் கூடுகின்றன. அந்தக் குறிப்பிட்ட இடத்தை நாம் கண்களால் காண முடியாது. ஆனால், முக்கடல் கூடுகின்ற இடம் நிச்சயமாக உண்டு. அதேபோன்றுதான் கடவுளும். கடவுளை நேரில் காண முடியாவிட்டாலும் கடவுள் நிச்சயமாக உண்டு''. கவிமணியின் இந்த விளக்கத்தைக் கேட்ட அந்த மாணவிகள், அவரைப் போற்றினார்கள்.
 - உ.ராமநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com