360 டிகிரி

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது. மணல் அள்ள உரிமை கிடையாது.
360 டிகிரி

கேரளத்தில்...

அண்டை மாநிலமான கேரளத்தில் அரசியல்வாதிகளுக்கு அடைமொழி கிடையாது. மணல் அள்ள உரிமை கிடையாது. ஆழ்துளை கிணறு (போர்வெல்) கிடையாது. அரசு அனுமதியின்றி மரங்களை வெட்ட முடியாது. நெகிழி (பிளாஸ்டிக்) உபயோகிக்க முடியாது.

- ராஜா

அப்படியா?

இன்று எலக்ட்ரானிக் உலகை ஆளும் தென் கொரியாவின் சாம்சங் நிறுவனத்தை, அதன் நிறுவனர் லீ பியுங் சூல் கடந்த 1938-ஆம் ஆண்டு தொடங்கியபோது உலர்ந்த காய்கறிகள், நூடுல்ஸ் போன்றவற்றை தான் அவரது நிறுவனம் விற்பனை செய்தது.

-எஸ். சடையப்பன்

எழுத்தாளர் புதுமைப்பித்தனின் படைப்புகளை விரும்பிய ஒரு பெண், அவருடைய புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். உடனே, புதுமைப்பித்தன் அனுப்பி வைத்தார் எந்த மாதிரி படம் தெரியுமா? செல்லரித்த அவரது நுரையீரலின் எக்ஸ்ரே படம். அந்நேரம் அவர் காசநோயால் துன்புற்றுக் கிடந்தார்.

"ஜகன்மோகினி' என்ற பெயரில்,ஒரு மாத இதழை 35 ஆண்டுகள் நடத்தியவர் வை.மு.கோதைநாயகி. அந்த இதழில் பாரதியார், ராஜாஜி, டிகேசி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள் என்பது சிறப்பு.

-த.சீ.பாலு

ஜப்பானைத் தெரியுமா?

ஜப்பானியர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவை "தெஞ்சிகு' என்று குறிப்பிட்டு வந்தனர். இச்சொல்லுக்கு "மோட்சபூமி' என்பது பொருள்.

ஜப்பானில் இருபது வயதுக்கு மேற்பட்ட எவரும் தேர்தல்களில் போட்டியிடத் தகுதி படைத்தவர்கள்.

ஜப்பானில் நூறு வயதைக் கடந்த அனைவருக்கும் அந்நாட்டின் பிரதமரால் ஜப்பான் தேசிய தினத்தன்று பரிசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஜப்பான் டைப் மிஷினில் 2,862 எழுத்துகள் உள்ளன. லைனோ மிஷின் ஜப்பான் மொழியில் கிடையாது. அச்சகத்தில் அச்சு கோர்க்க 3,500 எழுத்துக்களை வைத்துக்கொண்டு சிரமப்பட வேண்டும்.

ஜப்பானில் மீன்களையும், முட்டைகளையும் ஏற்றிச் செல்வதற்கு மட்டும் தனி ரயில்கள் விடப்படுகின்றன.

நாற்பதாவது வயது நிறைவடைவதை ஜப்பானியர்கள் சிறப்பாக விழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். நாற்பதாம் ஆண்டே மனித வாழ்வில் நல்ல அனுபவ அறிவும், ஆழ்ந்து சிந்தித்து முடிவு கூறும் ஆண்டு என்று கருதப்படுவதால் இவ்வாறு விழா கொண்டாடுகின்றனர்.

-நெ.இராமன்

வரும் 2022- ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெறுகிறது. இதன் மூலம், அப்போட்டியை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமை கத்தாருக்குக் கிடைத்துள்ளது.

வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு, லாட்வியா. இங்குள்ள யங்ய்ற்ஹள் தன்ம்க்ஷஹ நீர்வீழ்ச்சி (360 அடி) அகலமுடையது. இதன் உயரம் 2 மீட்டர் மட்டுமே. ஐரோப்பாவிலேயே அகலமான நீர்வீழ்ச்சி இதுதான்.

-க.ரவீந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com