பேராசிரியர்களின் "கோல உரையாடல்'

1988 ஆகஸ்டு திங்கள் 20-ஆம் தேதி "கோல உரையாடல்' நிகழ்ச்சியில் "இன்று இவர்கள் சந்தித்தால்' என்ற தலைப்பில் பேராசிரியப் பெருமக்கள் வேடம் அணிந்து விவாதம் செய்ய வேண்டுமென
பேராசிரியர்களின் "கோல உரையாடல்'

1988 ஆகஸ்டு திங்கள் 20-ஆம் தேதி "கோல உரையாடல்' நிகழ்ச்சியில் "இன்று இவர்கள் சந்தித்தால்' என்ற தலைப்பில் பேராசிரியப் பெருமக்கள் வேடம் அணிந்து விவாதம் செய்ய வேண்டுமென இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது.
 கம்பனாக பேராசிரியர் பா.நமசிவாயம், திருவள்ளுவராக முனைவர் இரா.செல்வகணபதி, பாரதியாக பேராசிரியர் கு.துரைராஜ், இளங்கோவாக முனைவர் அ.அறிவொளி என நிச்சயிக்கப்பட்டிருந்தது.
 மாலை 6 மணிக்கு ராஜபாளையம் கம்பன் கழகம் சார்பில் நாடக விழா (கோல உரையாடல்). 4 மணிக்கு ஒப்பனை செய்யும் நேரம். ஒப்பனைக் கலைஞர் ஆர்டிஸ்ட் எஸ்.குற்றாலம் (சிவகாசி) சொல்கிறார்: "பேராசிரியர் கு.துரைராஜ் உடல் பெருத்து இருக்கிறது. அவர் பாரதி வேடம் அணிவது பொருத்தமல்ல'. உடனே முனைவர் அ.அறிவொளி பாரதி வேடத்தை நானே ஏற்கிறேன் என்கிறார். பேராசிரியர் கு.துரைராஜுக்கு இளங்கோ வேடம் கொடுக்கப்படுகிறது. இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக நாடக நடிகர்களின் வேடம் மாற்றப்படுகிறது. அதற்கு வழி விட்டவர் முனைவர் அ.அறிவொளி.
 இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழறிஞர்கள் அனைவரும் ஏற்கெனவே நம்மை விட்டு மறைந்துவிட்டனர். கடைசியாக சமீபத்தில் முனைவர் அ.அறிவொளியும் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு தமிழக மக்கள் தாங்கொண்ணா துயரை அடைந்தனர். அவர் ஆன்மிகப் பேச்சாளர்; பட்டி மன்றமா? வழக்காடு மன்றமா? கருத்துகளை ஆழமாக முன்வைப்பதில் முன்னணியில் இருந்தவர். கல்வித்துறையிலும், அக்குபஞ்சர் மருத்துவத் துறையிலும் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்; சிறந்த எழுத்தாளர்.
 கோல உரையாடலுக்கு வருவோம். முன்னாலேயே தயார் செய்யப்படாத விவாதத்தில், இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக வேடம் மாற்றப்படுகிறது. ஆனால், அந்நிகழ்ச்சி தமிழக மக்களின் மனதில் ஊடுருவிப் பாய்ந்து கொள்ளை கொள்கிறது.
 தூர்தர்ஷனில் (அன்று தனியார் தொலைக்காட்சி எதுவுமே இல்லாத சமயம்) 45 நிமிடங்கள் ஓடுகிறது. மறைந்த முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை மு.மு.இஸ்மாயில், நிகழ்ச்சியைப் பார்த்து பரவசமடைகிறார்.
 "இதைப்போன்றுதான் நிகழ்ச்சிகளை அமைத்து குறிப்பாக கிராமங்களில் பரப்பி இலக்கிய நயத்தோடு வாழ்க்கை நெறிகளைப் பரப்ப எண்ணியிருந்தேன். அதை ராஜபாளையம் நண்பர்கள் செய்துவிட்டனர்'' என்று ஏவிஎம் சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகிறார்.
 - என்.எஸ்.முத்துகிருஷ்ணராஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com