22 ஆண்டுகளுக்குப் பின்...

எஸ்.எச். மீடியா டிரீம் நிறுவனம் தயாரித்து வரும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா'. விகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மதுமிதா நடிக்கிறார்.
22 ஆண்டுகளுக்குப் பின்...

எஸ்.எச். மீடியா டிரீம் நிறுவனம் தயாரித்து வரும் படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா'. விகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மதுமிதா நடிக்கிறார்.
 விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், ராகுல் தாத்தா, டெல்லி கணேஷ், நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் சித்ரா இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த "சேரன் பாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த சித்ரா, ஒரு கட்டத்துக்குப் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் திரைக்கு வருகிறார். வேலைக்கு செல்லாமல் பொழுதை கழிக்கும் இளைஞர்களும், வாய்ப்பு வந்தால் வாழ்க்கையில் சாதிப்பார்கள் என்ற கருவை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்ராவும், டெல்லி கணேஷும் கதாநாயகனின் பெற்றோர்களாக நடித்திருந்தாலும், அவர்களது பிளாஷ் ஃபேக் காதல் காட்சிகள் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com