எதிர்காலச் செய்திகளை இன்றே வாசியுங்கள்!

இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதும் பல நாடுகள் தங்கள் நாட்டிற்கான வளர்ச்சி குறித்த பல்வேறு கனவுகளைக் கொண்டிருக்கின்றன.
எதிர்காலச் செய்திகளை இன்றே வாசியுங்கள்!

இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதும் பல நாடுகள் தங்கள் நாட்டிற்கான வளர்ச்சி குறித்த பல்வேறு கனவுகளைக் கொண்டிருக்கின்றன. தங்கள் கனவுகளை
நிறைவேற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டும், அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளும்
எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு கற்பனைச் செய்திகளைக் கொண்டு வருங்காலச் செய்திகள் (News of Future)) எனும் செய்தித்தாள் ஒன்று இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த இணையதளத்தில் 2020 ஆம் ஆண்டு, 2025 ஆம் ஆண்டு, 2030 ஆம் ஆண்டு, 2035 ஆம் ஆண்டு, 2040 ஆம் ஆண்டு, 2050 ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் (Environment), உடல்நலம் (Health), சமூகம் (Society), தொழில்நுட்பம் (Technology), உடற்தேய்வு நோய் (Aids), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), கல்வி (Education), பொழுதுபோக்கு (Entertainment), மக்கள்தொகை (Population), போக்குவரத்து (Transportation), விண்வெளி (Space), விளையாட்டு (Sports) என்று முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

மேற்காணும் ஒவ்வொரு தலைப்பிலும், அத்தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு வருங்காலச் செய்திகள் கற்பனையாக எழுதப்பட்டுப் பார்வைக்குக்கிடைக்கின்றன. இந்தச் செய்திகள் அனைத்தும் கற்பனையாக இருந்தாலும், சில செய்திகள் வியப்பூட்டுவதாகவும், சில செய்திகள் மகிழ்ச்சியளிப்பதாகவும், சிலசெய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. இச்செய்திகளில் பல செய்திகள்  நமக்கு வருங்காலம் குறித்த எச்சரிக்கையினைத் தருவதாகவே
அமைந்திருக்கின்றன.

ஆகஸ்ட் 23, 2025 இல் சந்திரனில் முதல் ஹோட்டல் திறக்கப்படுகிறது - ஜூலை 1, 2030 இல் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விட்டது -
நவம்பர் 1, 2050 அதிக முதியவர்கள் வசிக்கும் நாடு தென்கொரியா - இவை போன்ற செய்திகளை உதாரணங்களாகச் சொல்லலாம்.

வருங்கால செய்திகளை வாசிக்க விரும்புபவர்கள் அனைவரும் http: www. newsoffuture.com எனும் இணைய முகவரிக்குச் சென்று, அங்குள்ள செய்திகளை
வாசித்து, வருங்காலம் குறித்துச் சிந்திக்கலாம். 
- மு. சுப்பிரமணி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com