கால் சிகிச்சைக்கென  ஒரு மருத்துவப் படிப்பு!

மருத்துவத் துறையில் பல பெயர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், போடியாட்ரி (Podiatry) என்ற பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டதில்லை.
கால் சிகிச்சைக்கென  ஒரு மருத்துவப் படிப்பு!

மருத்துவத் துறையில் பல பெயர்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், போடியாட்ரி (Podiatry) என்ற பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டதில்லை.

போடியாட்ரிக் மருத்துவ சிகிச்சை (Doctor of Podiatric Medicine) என்ற மருத்துவ அறிவியலின் இந்தப் பிரிவு ப்ர்ஜ்ங்ழ் ப்ண்ம்க்ஷள் எனப்படும் பின்னங்கால்கள், பாதம், கணுக்கால் பகுதிகளில் ஏற்படும் நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதாகும். குறிப்பாக, கால் ஆணி, Callosity, விரல் ஓர பாதிப்பு, கால் நகங்களின் ஒழுங்கற்ற வளர்ச்சி, நீரிழிவு நோயால் ஏற்படும் ஆறாப் புண்கள், சமச்சீரற்ற பாதங்கள், கணுக்கால் எலும்பு பிரச்னை உள்ளிட்ட பலவற்றுக்கும் தீர்வு காண்பவர்களே Podiatrist மருத்துவர்கள்.

உலகம் முழுவதும் கால் மற்றும் பாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் ஏற்படும் ஆறாத கால் புண்களுக்கு சிகிச்சை பெறுவோர். சர்வதேச அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 42.2 கோடி பேர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 7 கோடி பேர். இது வரும் 2030-இல் 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதம் பேர் கால் புண்களுக்கு சிகிச்சை பெறுவதாகக் கருதப்படுகிறது. 

வளர்ந்த நாடான அமெரிக்காவில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு போடியாட்ரிக் மருத்துவர் மட்டுமே உள்ளதாகவும், இதனால், அங்கு போடியாட்ரிக் மருத்துவப் படிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தகவல் உள்ளது.

இந்த நிலையில், மக்கள்தொகையும், நீரிழிவு நோயாளிகளும் அதிகமுள்ள நம் நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் போடியாட்ரிக் பயில்வது  குறித்து விழிப்புணர்வு பெறாமல் உள்ளதாக  சர்வதேசக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், மாணவர்களின் ஆர்வக் குறைவு அல்லது தயக்கத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக,  Doctor of Podiatric Medicine- DPM படிப்பு என்பது அனைத்து வெளிநாடுகளிலும் பிளஸ் 2 கல்விக்குப் பிறகு 3 அல்லது 4 ஆண்டுகள் கொண்ட Under Graduate Podiatry Degree அல்லது Health Science Degree with Master of Podiatry என்ற முழுமையான போடியாட்ரிஸ்ட் ஆகும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள இன்னும் சில பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டுகள் இளைநிலை பட்டமாக,  போடியாட்ரிக் அடிப்படை அறிவியல் பாடங்களும், 2 அல்லது இரண்டரை ஆண்டுகள் Master of Podiatry கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வழியில் ஐந்தரை ஆண்டுகளில் முழுமையான போடியாட்ரிஸ்ட் ஆக முடியும். இவ்வாறு போடியாட்ரிஸ்ட் முடித்தவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள போடியாட்ரிக் அசோசியேசனில் பதிவு செய்து கொண்டு 3 ஆண்டுகள் வரை தேர்ந்த மருத்துவர்களின் கீழ் Residency பயிற்சி பெறுவது அவசியம். பிறகே, அவர்கள் தனித்து இயங்கலாம்.

ஆனால், இந்தியாவில் போடியாட்ரிக் பயில்வது அதிக காலத்தை எடுத்துக் கொள்வதாக உள்ளது. இங்கு நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதலில் MBBS பயில வேண்டும். பிறகு அதை அடிப்படையாக வைத்தே போடியாட்ரிக் 4 ஆண்டுகள் பயின்று 3 ஆண்டுகள் Residency பயிற்சி பெற வேண்டும். வெளிநாடுகளில் Residency பயிற்சியையும் சேர்த்து 7 அல்லது 8 ஆண்டுகளே ஆகும் நிலையில், இந்தியாவில் 11 ஆண்டுகள் தேவைப்படும் என தெரிகிறது.

இதனாலேயே நம் நாட்டில் டிபிஎம் பயில பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை என கருதப்படுகிறது. அதேபோல DPM, DPS கோர்ஸ் உள்ள மருத்துவக் கல்லூரிகளும், அதற்கு ஒதுக்கப்படும் இடங்களும் மிகக் குறைவு.சில கல்லூரிகளில் டிப்ளமா கோர்ஸுகளும் உள்ளன. என்றாலும், இதுகுறித்த விழிப்புணர்வும் மிகக் குறைவாகவே உள்ளது. 

முறையாக DPM முடித்தவர்கள் ரெசிடென்ஸி பயிற்சிக்குப் பிறகு தாங்கள் விருப்பப்படும் சிறப்புப் பிரிவில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக, Podiatric Orthopedics, Podiatric Primary Care, Podiatric Sports Medicine, Podiatric Surgery, PodoPediatrics, Wound Care and Management  என தனித்துவமிக்க Podiatrist ஆக பிரகாசிக்கலாம். சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட DPMMBA Dual Degrees பயிலும் வாய்ப்பும் உள்ளது.  தகுதிபெற்ற, திறமைமிக்க Podiatrist 16 வகையான சிறப்பு மருத்துவர்களாக பரிணமிக்க முடியும். பல வகையான வேலைவாய்ப்புகளின் கீழ் மாதம்தோறும் லட்சக்கணக்கில் ஊதியம் பெறமுடியும். 

வெளிநாடுகளில் MBBS பயிலச் செல்லும் இந்திய மாணவர்கள் DPM பயில்வது குறித்து பரிசீலிக்கலாம். அதே நேரத்தில் இந்தியாவில் DPM கல்வித் திட்டத்தை எளிமையாக்கி அதிகமான மாணவர்கள் DPM பயில ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு அதிகரிப்பதோடு, தரமான Podiatric மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Indian Podiatry Association இந்தியாவில் Diabetic Foot Care- Podiatry Course -ஐ நடத்தி வருகிறது. மருத்துவர்களுக்கு 4 வாரம் மற்றும் 8 வார கோர்ஸýம், பாராமெடிக்-ஐச் சேர்ந்தோருக்கு தனியாக 4 வார கோர்ûஸயும் நடத்துகிறது. நிகழாண்டில், ஏப்ரல் 22, 23, மே 20, 21, ஜூலை 22, 23, ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் குறுகியகால பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com