இணைய வெளியினிலே!

அதுதான் தைப்பொங்கல் வைத்து சூரியனைக் கும்பிட்டாச்சே. குந்தியைப் போல கர்ணனைப் பெற்றெடுக்கும் வயதும் இல்லை.
இணைய வெளியினிலே!

முக நூலிலிருந்து....
• இயற்கை என் ஆசிரியன்... 
இயற்கை என் தந்தை... 
இயற்கை என் மூதாதை... 
இயற்கை என் தாய்...
இயற்கை என் வழிகாட்டி... 
இயற்கை என் தோழன்.
- நடராஜன் சுந்தரபுத்தன்

• ஆச்சரியமாய் இருக்கிறது,
நார் நாராய்க் 
கிழித்துத் தொங்கவிட்டாலும்
தோரணமாகிவிடுகிறார்கள்.
- நா.வே.அருள்

• அந்த நாலு பேருக்காக
நீங்கள் கவலைப்பட்டால்,
உங்களால் பல்லக்கில் 
ஏறவே முடியாது.
- மகேஷ் பாபு பத்மநாபன்

• அப்பளத்தை
 ஒடைச்சி தான் 
சாப்பிடுறோம்.
ஆனா நமக்கு 
பரிமாறும்போது,
ஒடைஞ்சிருந்தால்...
பிடிக்கறது 
இல்லைல்ல...
வாழ்க்கையும் 
அப்படித்தான்.

• ரொம்ப நேரமா
நகராமல் நிற்கும் டிராப்பிக்குல... 
கடைசியாக வந்தவன் அடிக்கும் 
ஹாரன் போலத்தான்...
இந்த சமுதாயத்துக்கு
நாம் சொல்லும் கருத்துக்களும்..
- மைநேம் ஸ் ராஜா

• ஆருக்காச்சும் தெரியுமா?
நவீன தொழில்நுட்பத்துல ஏதோ வாளின்னு ஒரு கருவியைக் கொண்டு...
கடல்ல கொட்டுன எண்ணெய் எடுத்தாத்தாங்களே...
சுத்தமா எடுத்தாச்சா?
- முருகதாஸ்

வலைத்தளத்திலிருந்து...
இப்போதெல்லாம் விரதமிருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
எந்த நாளில் விரதமிருக்கலாம்? 
ஞாயிற்றுக்கிழமை விரதம் - சூரிய பகவானுக்கு.
அதுதான் தைப்பொங்கல் வைத்து சூரியனைக் கும்பிட்டாச்சே. குந்தியைப் போல கர்ணனைப் பெற்றெடுக்கும் வயதும் இல்லை. அவள் சொல்லிக் கொடுத்த  மந்திரமும் மறந்துவிட்டது.
திங்கட்கிழமை விரதமிருந்தால் சோமவிரதமாயிற்றே.
சிவனுக்குரியது. விரதமிருப்பதில் தவறு வந்தால் கோவக்காரன். நெற்றிக்கண்ணால் எரித்தாலும் எரித்துவிடுவான். வேண்டாம்.
செவ்வாய்க்கிழமை விரதம் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்லது.
எனக்கு செவ்வாய் தோஷமில்லையே.
புதன்கிழமையோ வியாழக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ புகழ், கல்வி, செல்வம் தரும் விரதங்கள்...
சனிக்கிழமை விரதமிருந்தால் கேது திசைக்காரருக்கு நல்லது.
சனிபகவான் கொடுக்கும் போது விபரீத ராஜயோகத்தைக் கொடுத்தாலும்
கொடுக்கலாம்.
எந்தக் கிழமை எதை வேண்டி விரதமிருக்கலாம்?
ஒரே குழப்பமாயிருக்கு...
என் குருவின் சிஷ்யையிடம் கேட்டேன்.
அவள் சொல்கிறாள்... "இப்போதைக்கு உனக்கு நாக்கில் சனி இருப்பதாலும்
கணினியில் கேது இருப்பதாலும் மவுனவிரதமே உத்தமம்'' என்று.
http:puthiyamaadhavi.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com