சூரிய ஒளி ஏஸி படுக்கை!

மின்சாரத்தைத்  தயாரிக்க பயன்படும் நிலக்கரி, எரிவாயு போன்ற இயற்கை வளங்களின் சுவடுகளை அடுத்த தலைமுறையினர், ஏடுகளிலும்,
சூரிய ஒளி ஏஸி படுக்கை!

மின்சாரத்தைத்  தயாரிக்க பயன்படும் நிலக்கரி, எரிவாயு போன்ற இயற்கை வளங்களின் சுவடுகளை அடுத்த தலைமுறையினர், ஏடுகளிலும், அருங்காட்சியகங்களிலும் காணும் நிலை வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

அந்த அளவுக்கு உலக மக்கள் போட்டி   போட்டுக் கொண்டு  இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

குளிர் பிரதேசங்களாக இருந்தாலும் சரி, வெயில் பிரதேசங்களாக இருந்தாலும் சரி மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

கோடைக் காலங்களில் வீட்டை குளுமையாக வைத்து கொள்வதற்காக குளிர்சாதனங்களை நாள் முழுவதும் பயன்படுத்துவது இப்போது அதிகமாகிவிட்டது. குறிப்பாக தூங்கும் நேரத்தில் ஏஸியைப் பயன்படுத்துவது அதிகம்.    மின் வெட்டு ஏற்பட்டால்  மட்டும்தான் குளிர்சாதனங்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கிறது.

இப்படி ஏசி இயந்திரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் மின்சாரம் வீணாகிறது.  இதைத் தடுக்கும் வகையில், சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஏஸி படுக்கையை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த   Aries  என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. 

சாதாரண ஏஸி இயந்திரங்களுக்குப் பயன்படும் மின்சாரத்தில் 20 சதவீதம் இருந்தால்போதும் இந்த சூரிய ஒளி ஏ.சி. படுக்கையை இயக்கிவிடலாம்.

2000 கி.வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின்தகடு, இன்வர்டர், 4 பேட்டரிகள், படுக்கையைச்  சுற்றி அமைக்கப்படும் திரைகள் ஆகியவை இந்த சூரிய ஒளி ஏஸி  படுக்கையுடன் வழங்கப்படுகின்றன. 

25, 0.3 டன் ஆகிய இரண்டு வகைகள் உள்ளன.  சூரிய ஒளி ஏஸி  படுக்கைகளைச்  சாதாரண மின்சாரத்தின் மூலமும் இயக்கலாம்.  வரும் டிசம்பர்  மாதம்   விற்பனைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குளிர்சாதனத்தை ஏற்கெனவே உள்ள படுக்கைக்கும் பொருத்திக் கொள்ளலாம் என்றும் சூரிய ஒளி மின் தகடுகளுக்கு 25 ஆண்டுகளும், இன்வர்ட்டர்களுக்கு 2 ஆண்டுகளும் வாரண்டி வழங்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாற்று எரிசக்தியான சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்ற ஆதங்கத்தை இந்த சூரிய ஒளி ஏஸி  படுக்கை 
நீக்கும் என்று எதிர்பார்க்
கலாம்.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com