வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 97

புரொபஸர் மற்றும் கணேஷ் தம்முடன் கிளி Captain Flint  ஐ எடுத்துக் கொண்டு புரொபஸரின் வீட்டுக்குச் செல்கிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 97

புரொபஸர் மற்றும் கணேஷ் தம்முடன் கிளி Captain Flint  ஐ எடுத்துக் கொண்டு புரொபஸரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கே வரவேற்பறையில்
புரொபஸரின் மனைவி மீனாட்சி சோபாவில் அமர்ந்து டி.வியில் "பிக் பாஸ்' நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். டிவியில் லயித்துப் போயிருக்கும் அவர்,
எதையோ சொல்லும் பொருட்டு ஒற்றை விரலை நீட்டியபடி இருக்கிறார். அவர் தங்க நிற பிரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருக்கிறார். முழுக்க நரைத்த
கூந்தலின் வெண் சுருள்கள் காதை மறைத்து தொங்குகின்றன.

புரொபஸர்: மீனு யார் வந்திருக்கா பாரேன்...
(மீனாட்சி பதிலளிக்காமல் டிவியில் மூழ்கி இருக்கிறார். Captain Flint பறந்து சென்று மீனாட்சியின் நீட்டின ஒற்றை விரலில் பவ்யமாய் அமர்ந்து தன் அலகால்
இறகுகளை நீவுகிறது)
மீனாட்சி: ஐயோ இது என்ன?
புரொபஸர்: Dear இது தான் Captain Flint . என்னுடைய நண்பரின் கிளி.  Flint,  இது தான் என் மனைவி மீனாட்சி. The ultimate couch potato.
மீனாட்சி:  So what? (புரொபஸரை நோக்கி கோபமாய்) You are the most hopeless bookworm. 
Captain Flint: என்ன கொள்ளை அழகு!  Meenakshi you dainty!
மீனாட்சி: I am flattered! Thanks
கணேஷ்: சார் couch potato என்றால் டிவியே சரணமென சதா பழியாய் கிடப்பவர் தானே?
புரொபஸர்: ஆமாப்பா...
கணேஷ்: ஒரு சந்தேகம்
மீனாட்சி: ஆரம்பிச்சுட்டியா?
புரொபஸர்: நீ கேளு...
கணேஷ்: Potato என்றால் உருளைக்கிழங்கு. அதுக்கும் டிவி பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: நல்ல கேள்வி. ஆனால் எனக்குப் பதில் தெரியாது. ஒருவேளை டிவி பார்த்து பார்த்து உருளைக்கிழங்காட்டம் மக்கள் உருளையா ஆகிடுவாங்கன்னு
சொல்ல வராங்களோ? என் வீட்டுக்காரி மாதிரி...
மீனாட்சி  ரீமோட்டை  ஓங்கியபடி: Do not ever body shame me. என் உடம்பு என் உரிமை. 
Captain Flint: நான் உன் கேள்விக்குப் பதில் சொல்றேன். Couch potato என்கிற பதம் 1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 அன்று முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. இப்பதத்தை உருவாக்கியவர் பெயர் டோம் இயாசினோ. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் இவர். அந்த காலத்தில் டிவிக்கு booby tube எனும் பெயர் கொச்சை வழக்கில் புழங்கியது. டிவியே கதியென கிடப்பவர்களை booby tubers என அழைத்தார்கள். Tuber  என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு தெரியுமா?
மீனாட்சி:  கிழங்கு சரியா?
Captain Flint: Correct. சில செடிகளின் அடித்தண்டு பருத்து கிழங்காக உருமாறும். உருளைக்கிழங்கு ஒரு உதாரணம். டிவியின் முன் அமர்ந்து உருளைக்கிழங்கு
போல் பருத்துப் போவதை கேலியாய் குறிப்பிடத் தான் couch potato எனும் பதம் முதலில் பயன்படுத்தப்பட்டது. And இன்னொரு விசயம் மீனாட்சி you are not a
couch potato. You are not fat, you are rather plumb. There is a difference you know!
கணேஷ்: அதென்ன?
Captain Flint:  Fat என்றால் குண்டாக அசிங்கமாக இருப்பது. ஆனால் plump என்றால் அழகாக குண்டாக இருப்பது. For example, you wouldn’t call Kushbu fat.
She was plump. குண்டா இருக்கிறது சிலருக்கு ரொம்ப அழகு சேர்க்கும்.
கணேஷ்: முதலில் நீ மீனாட்சி மேடமை dainty என்றாய். அதற்கு என்ன அர்த்தம்?
மீனாட்சி: I will explain. Dainty என்றால் நளினமான, மெல்லிதான தோற்றம் கொண்டிருப்பது. நடிகை த்ரிஷா போல.
புரொபஸர் (மீனாட்சியை நோக்கி): நீ  த்ரிஷாவா?
Captain Flint: அவங்க விரல் எவ்வளவு மெல்லிசா, வடிவா, தங்கத்தில செஞ்ச மாதிரி இருக்குது. எனக்கு அவங்க விரலில் இருந்து கீழே இறங்கவே தோணல.
மீனாட்சி: I am so glad there is someone to flirt my finger. ஹா... ஹா... (புரொபஸரிடம்) என்னிக்காவது என்னை இது போல புகழ்ந்திருக்கீங்களா?
புரொபஸர் முகத்தை திருப்பிக் கொள்கிறார்.  
Captain Flint: Flirt என்றால் வழியறது மட்டும் இல்லை. ஒரு கிளியாக flirting is something I could never give up.
மீனாட்சி: நிஜமாவா?
Captain Flint  (தன் இறகுகளை அடித்துக் காண்பிக்கிறது) ஒரு பறவை இப்படி இறகசைக்கிறதுக்கு பேரும் flirting தான். 
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com