லென்ஸ் இல்லா கேமரா!

கேமரா எனும் சிறிய துளைக்குள் உலகமே தொலைந்துள்ளது என்றே கூறலாம். ஆம், இன்றைய இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை கேமராவிற்கு அடிமையாகி உள்ளனர்.
லென்ஸ் இல்லா கேமரா!

கேமரா எனும் சிறிய துளைக்குள் உலகமே தொலைந்துள்ளது என்றே கூறலாம். ஆம், இன்றைய இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை கேமராவிற்கு அடிமையாகி உள்ளனர்.

அப்படிப்பட்ட கேமரா தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக தொலை தூரத்தில் உள்ள படங்களை பெரிய லென்ஸ்கள் இல்லாமலேயே புகைப்படம் எடுக்கும் புதிய கேமராவை அமெரிக்கா வாழ் இந்தியர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்தியரான அசோக் வீரராகவன் "சவி' என்ற புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் தனது மேற்படிப்பை முடித்துவிட்டு ரைஸ் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினி பொறியியல் துறையில் போராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அசோக் வீரராகவனின் கண்டுபிடிப்பில் உருவாகி உள்ள புதிய கேமரா, தொலைதூரத்தில் உள்ள பொருளை லேசர் ஒளியின் மூலம் பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கும்.

பின்னர் அந்தப் படங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு புதிய மென்பொருள் மூலம் ஒன்றுசேர்த்து புகைப்படம் இறுதி செய்யப்படுகிறது. இதுகுறித்து அசோக் வீரராகவன் மேலும் கூறியதாவது:
"சாதாரண கேமராவில் பெரிய லென்ஸ், அபர்சர் ஆகியவை பயன்படுத்தி புகைப்படும் எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த "சவி' தொழில்நுட்பம் மூலம் தொலைதூரத்தில் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, அல்லது கைரேகையாக இருந்தாலும் சரி லேசர் மூலம் துல்லியமாகப் படம் பிடித்து விடலாம்.
எனினும், சூரிய ஒளியில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது. தொலைதூரத்தில் இருக்கும் பொருள்களைப் புகைப்படம் எடுக்க டெலஸ்கோப் போன்ற அதிக எடை கொண்ட லென்சுகளை இனி நாம் பயன்படுத்தத் தேவையில்லை'' என்கிறார் அசோக் வீரராகவன்.
அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com