காலணி வடிவமைப்பு இலவசப் பயிற்சி!

புட்வேர் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் FDDI -( FOOTWEAR DESIGN & DEVELOPMENT INSTITUTE) எனப்படும் காலணி வடிவமைப்பு பயிற்சி நிறுவனம்,
காலணி வடிவமைப்பு இலவசப் பயிற்சி!

புட்வேர் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் FDDI -( FOOTWEAR DESIGN & DEVELOPMENT INSTITUTE) எனப்படும் காலணிவடிவமைப்பு பயிற்சி நிறுவனம், இந்தியாவில் முதன்முதலாக 1996 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்துகான்பூர், ஆக்ரா, ரேபரேலி, கொல்கத்தா, ராணிப்பேட்டை,அமேதி ஆகிய இடங்களில் துணை பயிற்சி மையங்கள் (OPERATOR TRAINING CENTRE)தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பயிற்சி மையங்களில் வேலையற்ற இளைஞர்களுக்கு இலவச காலணி வடிவமைப்புப் பயிற்சி அளித்து அவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் 1 மாத கால பயிற்சியாக கட்டிங் ஆபரேட்டர் கோர்ஸ், ஸ்டிச்சிங் கோர்ஸ் முற்றிலும் இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன. இவை தவிர, தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் 3 மாத கால பயிற்சியாக காலணி உற்பத்தி தொழில்நுட்பம் (FOOTWEAR MANUFACTURING TECHNOLOGY) பயிற்சியும் முற்றிலும் இலவசமாக கற்றுத் தரப்படுகின்றன.

பயிற்சிகள் : கட்டிங் ஆபரேட்டர் கோர்ஸ்: இப்பயிற்சியில் கட்டிங் மெஷின் இயக்குவது, கட்டிங் நுட்பங்கள், ஹைடு கட்டிங், மெஷின் கட்டிங், லே அவுட்
செய்தல், பொருள் சிக்கனப்படுத்துதல், லெதர் அடையாளம் காணுதல், தரம் பிரித்தல், சார்டிங், தர பரிசோதனை போன்றவைகள் கற்றுத்தரப்படும்.

ஸ்டிச்சிங் ஆபரேட்டர் கோர்ஸ் : இப்பயிற்சில் நவீன தையல் மெஷின் இயக்குவது, ஃபிளாட் பெட், போஸ்ட் பெட், தெர்மோ ஃபோல்டிங், ஸ்கைவிங், ஸிக் ஸாக்,ஸ்ட்ரோபால் மெஷின் இயக்கம், ஸேன்ட் ஃபோல்டிங், அப்பர்ஸ் செய்முறை மற்றும் தர பரிசோதனை போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

தகுதி: இந்தப் பயிற்சிகளில் சேர எழுதப் படிக்க தெரிந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் சேரலாம். மேலும் தமிழக அரசின் திறன்
மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் அளிக்கப்படும் 3 மாத கால பயிற்சியாக காலணி உற்பத்தி தொழில்நுட்பம்(FOOTWEAR MANUFACTURING TECHNOLOGY) பயிற்சியில் சேர 10 மற்றும் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கி பிரபல காலணி உற்பத்தி நிறுவனங்களில்100 சதவிகிதம் வேலை வாய்ப்பைப் பெறலாம். இந்நிலையில் ராணிப்பேட்டை சிப்காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் துணை பயிற்சிமையத்தில் வெற்றிகரமாக பயிற்சி பெற்று 100 சதவிகிதம் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
ராணிப்பேட்டை பயிற்சி மைய முகவரி :
மேலாளர்,
FDDI - FOOTWEAR DESIGN & DEVELOPMENT INSTITUTE,
OPERATOR TRAINING CENTRE,
பிளாட் எண். 119 , சிட்கோ தொழிற்பேட்டை,
ராணிப்பேட்டை, 04172 : 244334
மேலும் விவரங்களுக்கு:
http://www.fddiindia.com/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
- பெ.பாபு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com