ஹோட்டல் நிர்வாகவியலில் முதுகலை பட்டப் படிப்பு 

ஹோட்டல் நிர்வாகவியலில் முதுகலை பட்டப் படிப்பு 

சர்வதேச அளவில் சுற்றுலா, ஹோட்டல் தொழில்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. வளர்ச்சி பெற்றுவரும் நிலைக்கு ஏற்ப,

சர்வதேச அளவில் சுற்றுலா, ஹோட்டல் தொழில்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. வளர்ச்சி பெற்றுவரும் நிலைக்கு ஏற்ப, புதிய தொழில் நுட்பம், சீரான நிர்வாகம், சிறப்பான உபசரிப்பு இருந்தால்தான் சுற்றுலாத்துறையும், ஹோட்டல் தொழிலும் மேம்படும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் கல்லூரியில் படித்தால் நூறுசதம் வேலை உறுதி என்ற நிலை தற்போது உள்ளது.

இந்தப் படிப்பில் வேலைவாய்ப்புடன், உணவு, தங்குமிடமும் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. தற்போது பல கல்லூரிகளில் ஹோட்டல்,கேட்டரிங் ஆகியவற்றுக்கு சான்றிதழ் படிப்பு மற்றும் பி.எஸ்.சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் என்ற மூன்று ஆண்டு பட்டப்படிப்பு மட்டுமே உள்ளது.

இந்நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், ஹோட்டல் நிர்வாகவியல் துறைக்காக எம்.பி.ஏ. ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் சயின்ஸ் என்ற இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பினை வழங்கி வருகிறது. இந்த படிப்பு தமிழகத்தில் இரு கல்லூரிகளில் மட்டுமே உள்ளது.

அதில் ஒன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியாகும்.

இந்த படிப்பு குறித்து கல்லூரி தாளாளர் ராஜாசிங் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
"சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஹோட்டல்கள் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசிமானதாகும். எனவே இந்தப் படிப்பு ஹோட்டல் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகும். எங்கள் கல்லூரியில் இந்தப் படிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுக்கு 30 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தப் படிப்புக்கு வெவ்வேறு துறைகளில் இருந்து மாணவர்கள் படிக்க வருவதால் தொடக்கத்தில் ஹோட்டல் நிர்வாகம் குறித்து அடிப்படை பாடம் நடத்தப்படும்.

தொழில்முறைப் பயிற்சி, கணினிப் பயிற்சி, தொழிலாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,வாடிக்கையாளர்களை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பன குறித்தும் பாடமும், பயிற்சியும் அளிக்கப்படும். 5 நட்சத்திர ஹோட்டல்களுக்குச் சென்று இரண்டு மாத காலம், சமையல், பரிமாறுதல், அறை நிர்வாகம், வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்கள் பெறுவார்கள். பின்னர் அது குறித்து கல்லூரிக்கு திட்ட அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும்.

தொடந்து ஹோட்டல் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் குறித்த பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

நிர்வாகத்தை எப்படிச் செம்மையாக நடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மனநிலைப் பயிற்சி, ஆளுமைத்திறன் பயிற்சி,கணினி வர்த்தக சேவை பயிற்சி, பில் போடுவது, அறையில் தங்குபவர்களுக்கான சேவை,மார்கெட்டிங், ஹோட்டலை உச்சத்துக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள், வணிகம் குறித்த பயிற்சி, சேவைத்துறை மேம்பாடு, கண்காணிப்பு, அதை சார்ந்த கருவிகள் சுற்றுலாத்துறையுடன் கூடிய செயல்பாடு, வியாபார நுணுக்கங்கள், தலைமைப் பண்புகள், சொந்தமாகத் தொழில் தொடங்கப் பயிற்சி, கழிவுமேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியாவில் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் ஐந்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதன்படி, இரண்டு ஆண்டு கல்லூரியில் படித்தவர்கள், இந்த ஹோட்டல்களில் 6 மாத காலம் நேரடிப் பயிற்சி பெறுவார்கள். பயிற்சியின் போது அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் சான்றிதழ் பெற்று அதே ஹோட்டல்களில் நிரந்தரமாக வேலையில் சேர்ந்துவிடலாம். துபையிலும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பல ஊர்களிலும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளதால் இந்த படிப்புக்கு தமிழகத்திலும் வேலை வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் இரண்டு ஆண்டு வேலை பார்த்த அனுபவம் இருந்தால் வெளிநாடுகளில் இந்த படிப்புக்கு மாதம் ரூ 1.75 லட்சம் ஊதியம் தரத் தயாராக 
உள்ளனர்'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com