ஒரு நாளில் ஒரு கிலோ எடையைக் குறைக்க முடியும்...! முயற்சி... முயற்சி... வெற்றி!

வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்க,வழக்கம் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் இன்று  சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாளில் ஒரு கிலோ எடையைக் குறைக்க முடியும்...! முயற்சி... முயற்சி... வெற்றி!

வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்க,வழக்கம் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் இன்று  சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடையைக்  குறைக்க ஜிம்முக்குச் செல்வது, கடின உடற்பயிற்சி, உணவில் கெடுபிடி என  படாதாபாடு பட்டு  வருகின்றனர்.

"பேரியாட்ரிக்' அறுவைச் சிகிச்சை, மாத்திரை, மருந்துகள் என உடல்பருமனை வைத்து பல மருத்துவமனைகள் ஒருபுறம்  பணம் கொழித்து வருகின்றன. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் உயிரிழப்புகள் நேர்ந்த அதிர்ச்சி சம்பவங்களும்  உண்டு. 

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) உயிரி மருத்துவத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் சித்தார்த்  குமாயில் அறுவைச் சிகிச்சையின்றி, ஒரு நாளில் ஒரு கிலோ வரை எடையைக் குறைக்கும் வழியைக்  கண்டறிந்துள்ளார்.  அவருடைய  இளைய சகோதரரின் உயிரிழப்பே அவரை  இந்த கண்டுபிடிப்புக்கு அழைத்து வந்துள்ளது.  

இதுகுறித்து அவரே விவரிக்கிறார்:

""ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது என் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 33 வயதே  ஆன என் இளைய சகோதரன் கபிலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நான் பணியாற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  ஆம்புலன்சில் விரைந்து கொண்டிருப்பதாகவும் பதட்டத்துடன் தெரிவித்தார்.

கபிலை அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடத்தியபோது அவன் மூச்சுவிடாததைக் கண்டு நான் உறைந்து போனேன்.  தொடர்ந்து 10 நிமிடங்கள் முயன்றும், உயிர் காக்கும் நடைமுறைகளை மேற்கொண்டும் பலனில்லை.  

கபில் உயிரிழந்ததற்கு காரணம் உடல்பருமன். அதனால்தான் மாரடைப்பு ஏற்பட்டது. இதேபோன்று பல நூறு  நோயாளிகள் உடல்பருமனால் ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோயால் இறந்து போவதையும் பார்த்திருக்கிறேன்.  உடல் பருமனைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினேன்.  அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியைத் துறந்து, பேராசிரியராகவும், ஆராய்ச்சி அறிஞராகவும் அதே மருத்துவமனையில்  செயல்படத் தொடங்கினேன்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எடைக் குறைப்புக்கான மருந்துகள், செயல்முறைகள், மூலிகைகள் என உலகில் உள்ள  அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, உடலில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள செல்களில் மாற்றத்தை ஏற்படுத்த  முயற்சித்தேன். இரண்டாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகும் உருப்படியான எந்தத் தீர்வையும் கண்டறிய முடியவில்லை.

இறுதி முயற்சிக்காக  ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிடைக்கக் கூடிய ஒருவகை பழத்தை ஆய்வுக்காக வரவழைத்தேன். ஆப்பிரிக்க  பழங்குடியின மக்கள் இந்த பழங்களை உண்டதால் வளர்சிதை மாற்றத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, வேட்டையாடுதல்,  சண்டையிடுதலில் திறமையானவர்களாகத் திகழ்ந்தனர் என்றும் நான் மருத்துவம் படித்தபோது பண்டைய மருந்துகள்  குறித்து பாடம் நடத்திய பேராசிரியர் கூறியிருந்தார்.

அந்தப் பழத்தை ஓவனில் வைத்து உலர்த்தி, நொறுக்கி, உப்புக் கரைசலை அதன் மேல் ஊற்றினேன். அந்தக் கலவையை  எனது ஆய்வுக்கூடத்தில் வளர்த்து வைத்திருந்த கொழுப்பு திசுக்கள் மீது ஊற்றிவிட்டு நம்பிக்கையற்றவனாக வீடு  சென்றேன்.

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தில் மறுநாள் ஆய்வுக்கூடத்தைத் திறந்த எனக்கு அதிர்ச்சி. கொழுப்பு  திசுக்களில் காணப்பட்ட கொழுப்பு பாதியாக உருகிப் போயிருந்தது. சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேன். இதை மனித  பரிசோதனைக்கு உட்படுத்தினால் பல மாதங்கள் தாமதமாகும் என்பதால் நானே சோதனை எலியாக மாறினேன்.

தினமும் ஒரு தேக்கரண்டி அந்தக் கலவையை உட்கொண்டு, உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்யத்  தொடங்கினேன். 2 வாரங்களில் 12 கிலோவை இழந்திருந்தேன், வழக்கத்துக்கு மாறான புத்துணர்ச்சியையும் அடைந்தேன்.

இதனைத் தொடர்ந்து மேலாண்மை தொழில்நுட்ப நிறுவன(எம்ஐடி) விஞ்ஞானி பீட்டர் மோல்னருடன் இணைந்து,  பழத்தின் சாறை ஒரு மாத்திரை வடிவில் உருவாக்கி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,200 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டேன். அதில் 97 சதவீதம் பேர் 30 நாள்களுக்குள் குறைந்தபட்சம் 15 கிலோ வரை எடை குறைந்திருந்தனர்.

இதை இன்னும் மேம்படுத்தி உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரையும்  அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதே என் லட்சியம்'' என்றார். 
- ஜெனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com