காற்றாலை தொழில்நுட்பப் பணி!

சர்வதேச அளவில் இன்று மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது எரிபொருள் உற்பத்தி.
காற்றாலை தொழில்நுட்பப் பணி!

சர்வதேச அளவில் இன்று மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது எரிபொருள் உற்பத்தி. மக்களின் அதீத நுகர்வு காரணமாக பெட்ரோலியம், நிலக்கரி போன்றவற்றின் உற்பத்தி அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இருக்குமா என்று தெரியாத நிலையில், மாற்று எரிசக்தியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது உலகம்.

மாற்று எரிசக்தியாக விளங்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியை தவிர்த்து, ஏனைய வழிகளான நீர் மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சக்தி, கடல் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதில், பருவநிலை மாற்றம் காரணமாக நீர்த் தேக்கங்களில் உரிய காலத்தில் நீர் நிரம்பாததால் நீர் மின்சாரம் என்பது வெகுவாக குறைந்துவிட்டது.

கடல் அலைகள் மூலம் மின்சார உற்பத்தி என்பது அமைவிடப் பிரச்னை, மிகை சப்தம், அதிக செலவு போன்றவற்றால் போதிய அளவில் எட்டப்படவில்லை. புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக எஞ்சி இருப்பது சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மட்டுமே. கணினி யுகத்தில் எதை இயக்க வேண்டும் என்றாலும் மின்சக்தி தேவைப்படும் நிலையில், மனிதகுல எதிர்கால வாழ்வு முழுமையும் காற்றாலை, சூரிய மின்சக்தி என்ற இரண்டை மட்டுமே நம்பியுள்ளது.

இதையொட்டியே காற்றாலை மின் உற்பத்தி, பராமரிப்பு தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான மிகப்பெரிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 20 வகையான பிரதான பணிகளில் சராசரி வருமானமும், வேலைவாய்ப்பு அளிப்பதில் முதலிடத்தில் உள்ளதாகவும் காற்றாலை தொழில்நுட்பப் பணி உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் துறை தகவல்படி ரண்ய்க் பன்ழ்க்ஷண்ய்ங் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய்ள் பணியின் வளர்ச்சி 2014-24 காலகட்டத்தில் 108 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. 2015 கணிப்பின்படி 2016-26 காலகட்டத்தில் இதே துறையிலான பணிவாய்ப்பு 96 சதவீதத்துடன் முதலிடத்திலேயே உள்ளது.

கடந்த 2003-இல் ரூ. 750 கோடியாக இருந்த காற்றாலை மின்சக்திக்கான சர்வதேச சந்தை தற்போது 10 மடங்காக அதிகரித்து ரூ. 7,300 கோடியாக உள்ளது. இது வரும் 2022-இல் ரூ. 12,400 கோடியாக உயரும் எனவும், அப்போது, இப்போதுள்ள ஊழியர்களைப் போல இருமடங்கு திறன்மிக்க தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போதே பல நிறுவனங்கள் அனுபவமிக்க காற்றாலை தொழில்நுட்பப் பணியாளர்களை பணியமர்த்த போட்டியிட்டு வருவதால், இத்துறையில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய பணி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

காற்றாலை தொழில்நுட்பப் பணி பெரும்பாலும் வெளியிடங்களுக்குச் சென்று பணியாற்றும் நிலை, குறுகிய இடத்துக்குள் நின்றும், மிக உயரத்தில் ஏறி தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்யும் சூழலை கொண்டதாகும்.

சென்னையில் உள்ள மத்திய அரசின் National Institute of Wind Energy அமைப்பு, இந்தத் துறையில் இளைஞர்கள் பணி வாய்ப்பு பெறுவதை ஊக்குவிப்பதற்காக Academic Associate Programme (AAP) மூலம் ஆண்டுதோறும் 100 இளைஞர்களுக்கு களப்பயிற்சி வழங்குகிறது. இதில் Work-Experience Internship (WEI) என்ற பிரிவில் பி.இ., பி.டெக். மற்றும் இயற்பியல், புதுப்பிக்கத்தக்க சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சக்தி ஆகிய பிரிவுகளில் முதுநிலை அறிவியல் முடித்த அல்லது இறுதியாண்டு பயிலும் இந்திய மாணவர்களுக்கு 2 மாதங்கள் முதல் 6 மாதங்கள் கொண்ட களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, Dissertation Internship (DI)  என்ற பிரிவில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ். மற்றும் மேலாண்மை துறையில் முதுநிலை பட்டம் பெற்ற அல்லது இறுதி ஆண்டு பயிலும் இந்திய மாணவர்களுக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், குஜராத்தில் உள்ள Wind World (India) Limited (WWIL)  என்ற காற்றாலை நிறுவனம் கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம் என 7 மாநிலங்களில் 3000 சதுர கி.மீட்டருக்கு தனது காற்றாலை பண்ணைகளை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 5600 ஊழியர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனம் தனது மிகப் பெரிய வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் Wind World Training Academy-யை தொடங்கி நடத்தி வருகிறது. இங்கு ஐடிஐ, டிப்ளமா முடித்து வரும் புதிய இளைஞர்கள் முதல் தொழில்நுட்பப் பட்டதாரிகள், மேலாண்மை துறையினர் மற்றும் புத்தாக்கப் பயிற்சி பெறுவோர் வரை அனைவருக்கும் பலவகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் Ecotech Institute என்ற நிறுவனம் Wind  Energy Technology  துறையில் டிப்ளமா கோர்ஸை நடத்தி வருகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு வின்ட் டர்பைன் டெக்னீசியன், அசிஸ்டென்ட் வின்ட் இன்ஜினியர், பெசிலிட்டி டெக்னீசியன், சைட் மேனேஜர், வின்ட் எனர்ஜி அனலிஸ்ட், வின்ட் டெக்னாலஜிஸ்ட், வின்ட் டர்பைன் சர்வீஸ் டெக்னீசியன், வின்ட் டெக்னீசியன், எலக்ட்ரிகல் டெக்னீசியன், எனர்ஜி எபீசியன்ஸி டெக்னீசியன், எனர்ஜி ரிசோர்ஸ் மேனேஜர், என்விரான்மென்டல் சொலூசன்ஸ் சர்வீஸ் டெக்னீசியன், ஃபீல்ட் சர்வீஸ் டெக்னீசியன், மேனுபாக்சரிங் சூபர்வைசர், மேனுபாக்சரிங் டெக்னீசியன் என 15-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com