வைரமாகும் காற்று மாசு!

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடர்களில் முதல் இடத்தில் இருப்பது மாசு. பூமிப்பந்தை விட்டு விண்வெளியில் ஆய்வு நடத்தி சாதனை படைத்த விஞ்ஞானிகள், பூமிக்குள் நிலவும் காற்று மாசைக் கட்டுப்படுத்த வழி
வைரமாகும் காற்று மாசு!

மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடர்களில் முதல் இடத்தில் இருப்பது மாசு. பூமிப்பந்தை விட்டு விண்வெளியில் ஆய்வு நடத்தி சாதனை படைத்த விஞ்ஞானிகள், பூமிக்குள் நிலவும் காற்று மாசைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
ஆனால், நெதர்லாந்தைச் சேர்ந்த டான் ரூஸ்கர்டே என்பவர் காற்று மாசுவைச் சுத்திகரித்து அதில் இருந்து வைரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
""ஒன்றும் அறியாத 8 வயது சிறுவன் ஒருவன் காற்று மாசினால் பாதிக்கப்பட்டு புற்றுநோய்க்கு ஆளான சம்பவம்தான், இந்த காற்று மாசு சுத்திகரிப்பு கோபுர கண்டுபிடிப்புக்கு முக்கிய காரணம்'' என்கிறார் டான் ரூஸ்கர்டே.
இதற்காக அவர், வீட்டில் பயன்படுத்தப்படும் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தைப்போன்று இரண்டு அடுக்குமாடி உயரத்தில் காற்று சுத்திகரிப்புக் கோபுரத்தை அமைத்தார்.
சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் இந்த கோபுரம் மணிக்கு 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவு மாசு அடைந்த காற்றை உள்வாங்கி, நானோ தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து சுத்தமான காற்றாக வெளியேற்றுகிறது.


இந்த கோபுரத்தில் இருந்து வெளியேறும் காற்று, வெளியே உள்ள காற்றை விட 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை சுத்தமானதாக உள்ளது. காற்று மாசுகளில் இருந்து 42 வகையான பல்வேறு நச்சுகள் இருப்பதைக் கண்டுபிடித்த டான் ரூஸ்கர்டே, அவை அனைத்தும் கார்பன் வகைகளைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்தார்.
பின்னர் அரை மணி நேரம் அதை அதிக அழுத்தத்துக்கு உள்படுத்தி வைரமாக மாற்றி சாதனை படைத்துள்ளார். கறுப்பு நிற கல்லைச் சுற்றிய வைரமாக அது காட்சியளிக்கிறது. செயற்கை வைரமாக கருத்தப்படும் இந்த காற்று மாசு வைரத்தை மோதிரத்தில் பதித்து மக்கள் அணிந்து வருகின்றனர். சீனாவில் சிலர் இந்த மோதிரத்தை வைத்து திருமணமும் புரிந்துள்ளனர்.
இந்த காற்று மாசு சுத்திகரிப்புக் கோபுரங்களை அதிக மாசு மிக்க நாடான சீனாவில் பல நகரங்களில் டான் ரூஸ்கர்டே நிறுவி உள்ளார். காற்று மாசு உள்ள நகரங்களில் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள தில்லியிலும் இவற்றை நிறுவ டான் ரூஸ்கர்டே திட்டமிட்டுள்ளராம். அவ்வளவுதான்... வரும் காலங்களில் வீட்டிலேயே காற்று சுத்திகரிப்பு கோபுரத்தை நிறுவி, வைரங்களை உற்பத்தி செய்து நாம் அணிந்துகொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com