வாங்க இங்கிலீஷ் பேசலாம்: 107

டிவியில் கிரிக்கெட் ஓடுகிறது. வர்ணனையாளர் maiden over என்கிற பிரயோகத்தை பயன்படுத்த மீனாட்சி அதைக் கேட்டு கடுப்பாகிறார். அதில் என்ன பிரச்னை என கணேஷுக்குப் புரியவில்லை.
வாங்க இங்கிலீஷ் பேசலாம்: 107

டிவியில் கிரிக்கெட் ஓடுகிறது. வர்ணனையாளர் maiden over என்கிற பிரயோகத்தை பயன்படுத்த மீனாட்சி அதைக் கேட்டு கடுப்பாகிறார். அதில் என்ன பிரச்னை என கணேஷுக்குப் புரியவில்லை.
""Maiden என்றால் என்ன எனத் தெரியுமா?'' என மீனாட்சி அவனிடம் கேட்கிறார்.

கணேஷ்: தெரியலியே மேடம்.
மீனாட்சி: உங்க புரொபஸரை கல்யாணம் பண்ணினப்ப நான் ஒரு Maiden.
கணேஷ்: நீங்க அப்போ ரொம்ப அழகா இருந்தீங்கன்னு சொல்றீங்களா?
மீனாட்சி: ம்ஹும்... இன்னும் மேல.
கணேஷ்: நீங்க ரொம்ப இளமையா இருந்திருப்பீங்க.
மீனாட்சி: இப்போ மட்டும் நான் என்ன கிழவியா?
கணேஷ்: ஐயய்யோ அப்படிச் சொல்லலீங்க. அதாவது நீங்க வந்து...
புரொபஸர்: இவ கிட்ட பேச்சுக் கொடுத்த நீ அம்பேல்
மீனாட்சி: எங்கிட்ட இப்ப இல்லாத ஒண்ணு அப்போ இருந்தது
கணேஷ்: ஓ... புரிஞ்சுது
மீனாட்சி: என்ன?
கணேஷ்: Happiness, sense of fulfillment, contentment. அதாவது சந்தோசம், திருப்தி, நிறைவு. சரியா?
மீனாட்சி: உன் இங்கிலீஷ் எல்லாம் சரி தான். ஆனால் நான் எதிர்பார்க்கிறது something tangible.
கணேஷ்: Tangible?
மீனாட்சி: palpable, tactile, physical, corporeal.
கணேஷ்: சுத்தம்
மீனாட்சி: அதாவது பெüதிகமானது. தொட்டுணர முடிவது. 
கணேஷ்: ஓ! நான் கணக்குப் பாடத்தில tangent என்ற விசயத்தைக் கேள்விப்பட்டிருக்கேன். அது எனக்கு சரியாப் புரிஞ்சதே இல்ல. ஆனால் தொட்டுப் பார்க்க முடியறது தான் tangent என்றால் ஒரு ஜியாமிட்ரிக் படத்தைத் தொட்டுணர முடியுமா?
மீனாட்சி: சரி tangent என்றால் என்ன?
கணேஷ்: அது வந்து... மறந்து போச்சு... 
புரொபஸர்: நான் சொல்றேன். ஒரு வளைகோடு. அதை சற்றே தொடும்விதமாய் ஒரு நேர்கோடு செல்கிறது. ஆனால் அது குறுக்கே போகாமல் தொட்டும் தொடாமலும் போகிறது. அது தான் tangent. நான் ஒரு சிக்கலான விசயத்தை வகுப்பில் சொல்லித் தரேன். நீ கவனிக்கிறாய். ஆனால் உன் மனம் நிலைக்கவில்லை. அது அப்போது goes off at a tangent. அதாவது என் பேச்சு தான் அந்த வளைகோடு. உன் மனம் ஒரு நேர்கோடு. நீ லேசாய் என் அருகே வந்து தொட்டு விட்டு ஆனால் என் விளக்கத்துக்குள் நுழையாமல் விலகிப் போகிறாய்.
கணேஷ்: சார், இந்த ரெண்டு சொற்களுக்கும் பொதுவாக தொடுவது என்பது இருக்கிறது. சரி தானே?
புரொபஸர்: கரெக்ட். Tangere எனும் லத்தீன் சொல்லில் இருந்து தான் இந்த இரு சொற்களும் தோன்றின. Tangere என்றால் தொடுவது. Tangible என்றால் தொட்டுணரக் கூடியது. Tangent என்றால் தொட்டும் தொடாமல் போவது.
மீனாட்சி: நீ ஏன் கேள்விக்கு பதில் சொல்லலையே கணேஷ்?
கணேஷ்: கண்டுபிடிச்சிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி உங்களுக்கு குழந்தை இல்ல. இப்போ இருக்குது. சரியா?
மீனாட்சி: தப்பு. ஆனாலும் கொஞ்சம் சரி. இன்னும் பின்னால போ.
கணேஷ்: இதுக்கு மேல ரிவர்ஸ் போட முடியாது மேடம்.
மீனாட்சி: கன்னிமை. Virginity. Then I was a maiden. Now I am not. அப்போ நான் கன்னியாக இருந்தேன். இப்போ இல்லையே.
கணேஷ்: ஆஹா... ஆனால் மேடம் அது ரொம்ப பிற்போக்கான சிந்தனை இல்லையா? 
மீனாட்சி: குட். உன் வாயால அப்படி சொல்ல வைக்கிறதுக்குத் தான் இவ்வளவு கேள்விகள் கேட்டேன். அது பிற்போக்கு என்றால் கிரிக்கெட்டில் ஒரு ரன் கொடுக்காத ஓவர் போடுறதை மட்டும் எப்படி bowl a maiden over  என்று சொல்லலாம்?
கணேஷ்: அப்படி என்றால் maiden over என்றால் கன்னி ஓவரா? 
மீனாட்சி: ஆம். மூன்று ஸ்டம்புகள் பெண்ணின் உடல். பேட் பெண் அணிந்துள்ள உடை. பந்து ஆணின் உடல். பந்து வீசும் ஆள் தான் ஆண்மகன். பந்து ஸ்டம்பில் பட வேண்டும். இல்லாவிட்டால் she is not consummated

அவள் கன்னியாகவே இருக்கிறாள். அதனால் தான் அது  maiden over.
கணேஷ்: அதென்ன consummated?

(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com