இணைய வெளியினிலே...

பல்வேறு அழிவுகளில் இருந்து, மும்பை நகரம் மீண்டும் எழுந்துள்ளது.  ஒரு மழை நாளில் ரயில்கள் முடங்கிப்போகும் போதோ
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
* நாம் படித்த போது எமது பள்ளி ஆசிரியர்கள் அடித்த அடியை,  
மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருந்திருந்தால்... 
அவர்கள் இன்றும் சிறையில் இருந்திருப்பார்கள்.  
அவர்கள் அவ்வாறு அடித்து எம்மை திருத்தவில்லை என்றால்,
நாம் இன்று சிறையில் இருந்திருப்போம்.
பழைய மாணவர் சங்கம்.
- கா. விஜய் ஆனந்த்

* இ மெயில் இருக்கு, ஜி மெயில் இருக்கு,  ஆனா, ஏ மெயில், பி மெயில், சி மெயில், டி மெயில், எஃப் மெயில் இதெல்லாம் இல்லையே எங்கே போச்சு? ஒரு வேளை... இன்னும் கண்டுபிடிக்காமலேயே இருக்கா... ஆல்பாபெட்டிக்படி தானே கண்டுபிடிச்சிருக்கணும்.  சம்திங்....தப்பிங்.... சரியா மக்கழே...! 
- சம்பத் இளங்கோவன்

* நான் உறங்கி எழும்போது,
கடவுளுக்கு பள்ளியெழுச்சி
பாடுகிறேன்.
****
* இல்லாததிலிருந்து
இல்லாமற்போனது 
இல்லாதது.
- ராம் சின்னப்பயல்

* தீக்குச்சியின் நெருப்பைத் தின்று 
பசியாறுகிறது, விளக்கு.
****
* வாசலுக்கு வெளியே
காத்திருக்கிறது நோய்...
வரவேற்புக் கம்பளம் 
விரிக்கிறது, உணவு.
- வையவன் வையவன்

* கவிஞன் உறங்கிவிடுகிறான்,
கவிதை விழித்தே இருக்கிறது... 
விழிகள் உருட்டி மிரட்டும்
அய்யனாரைப் போல!
- முனைவர் ஆ.மணவழகன்

* உழைத்துப் பெறுவது செல்வம்
உழைக்காமல் பெறுவது தொப்பை...
- பெ. கருணாகரன்

* காய்ந்து போகாத ஈரமில்லை! 
காலம் ஆற்றாத காயம் இல்லை
- நேசமிகு ராஜகுமாரன்

வலைத்தளத்திலிருந்து...
பல்வேறு அழிவுகளில் இருந்து, மும்பை நகரம் மீண்டும் எழுந்துள்ளது.  ஒரு மழை நாளில் ரயில்கள் முடங்கிப்போகும் போதோ, போக்குவரத்து முற்றாக முடங்கிக்கிடக்கும் போதோ, அந்த நகரத்து மனிதர்கள் எதையும் எதிர்கொள்வதற்கு தயாராவார்கள். மழை அதிகமாகப் பெய்தால், ரயில் போக்குவரத்து முடங்கிவிடும்.  அப்போது, ஆயிரக்கணக்கான பயணிகள், ரயில் நிலையங்களிலே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில், வெளியில் எங்கும் செல்ல முடியாது.  அப்போது, அந்த பகுதியில் வசிக்கும் நடைபாதை வாசிகள், பெரிய டிரம்களில் டீ  தயாரித்து எடுத்து வந்து பரிமாறுவது; ரொட்டி, பிஸ்கெட்கள் வழங்குவது என  அரவணைக்கும் செயல்களைச் செய்வார்கள். இது அந்த நகரத்துக்கே உரிய தனிச்சிறப்பாக நான் பார்க்கிறேன். 
https://nanjilnadan.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com