வணிகத் திறன் வளர்ப்பு பயிற்சி

ஒருவர் வணிகத்தை நடத்த வேண்டுமானால் பல்வேறு திறமைகளை அவர் பெற்றிருக்க வேண்டும்.
வணிகத் திறன் வளர்ப்பு பயிற்சி

ஒருவர் வணிகத்தை நடத்த வேண்டுமானால் பல்வேறு திறமைகளை அவர் பெற்றிருக்க வேண்டும். அத்தகைய திறன் இருந்தால் தான் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியும்.  அதே நேரத்தில் அத்தகைய திறன் அவரிடம் வேலை செய்பவர்களிடமும் இருக்க வேண்டியது அவசியமாகும்.  

பொருட்களை வாங்கி விற்பது மட்டுமல்ல வணிகம்.  உற்பத்தி செய்வது முதல் அதனை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது வரையில், பல்வேறு கட்டங்களில் பொருட்கள், சேவை வழங்குவது வரையில் வணிகம் செயலாற்றுகிறது. 

அத்தகைய  வணிகத் துறையில் தலைமை பண்பு, வியாபார தொடர்புடைய நபர்களிடம் பேசும் திறன், சந்தைப்படுத்துதல், மனிதவள மேம்பாடு, பயிற்சியாளருக்கு பயிற்சி அளிக்கும் திறன், நுகர்வோர் சேவை, மேலாண்மை உள்ளிட்ட முக்கிய திறன்களை வணிகம் செய்பவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அவர்களிடம்  பணிபுரிபவர்களும் அத்தகைய திறன்களைப்  பெற்றிருக்க வேண்டும்.  அதற்காக வணிகத்  திறன் வளர்ப்புப்  பயிற்சிகள் சில பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

சில நிறுவனங்கள் தங்களுடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவ்வப்போது இவ்வாறான பயிற்சிகளை நடத்தி அவர்களைப்  புத்தாக்கம் செய்வார்கள்.   இத்தகைய பயிற்சிகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் நடத்தப்படுகின்றன. 

வணிகத்  திறன் பயிற்சிகள் : communication, listening, negotiation, etiquette, language skills, Business and commercial awareness,  Strategic awareness,  Understanding funding streams and mechanisms, Information management, Organisation and control, Team building, Communication and persuasion, Networking and public relations, Leading change, cooperating with others, planning and organising, making decisions communication. Talking over the phone, making a presentation to a group.
வணிகத் திறன் பயிற்சிகளை நடத்தும் சில நிறுவனங்களின் இணையதள முகவரி:
http://www.imd.org
http://www.skillpath.com
https://www.globalknowledge.com
http://www.dalecarnegie.com
-எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com