சிறப்பு மருத்துவப் படிப்புகள்

பொதுவாக மருத்துவப் படிப்பு என்றால் முக்கியமாக எம்பிபிஎஸ், பல் மருத்துவர், மாற்றுமருத்துவம் மற்றும் இந்திய பாரம்பரிய மருத்துவத்துறைகளான  சித்த மருத்துவம்,
சிறப்பு மருத்துவப் படிப்புகள்

பொதுவாக மருத்துவப் படிப்பு என்றால் முக்கியமாக எம்பிபிஎஸ், பல் மருத்துவர், மாற்றுமருத்துவம் மற்றும் இந்திய பாரம்பரிய மருத்துவத்துறைகளான  சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதி மருத்துவம்  உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகள் உள்ளன.

இதில் பலரும் படிக்க விரும்புவது அலோபதி என்ற எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பாகும்.  அதற்கு அடுத்தப்படியாக பல் மருத்துவ படிப்பாகும்.  பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை இத்தகைய படிப்புகளைத் தான் படிக்க வைக்க விரும்புவார்கள்.  ஆனால் இந்த இரண்டிலும் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றால் மனம் வருந்த வேண்டியதில்லை. மருத்துவத்துறை சார்ந்த  பல்வேறு மருத்துவத் தொழில் நுட்ப படிப்புகள் பல உள்ளன.  அத்தகைய படிப்புகளை படித்தாலும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அதில் சில முக்கிய படிப்புகள்:
1.Diploma in Emergency Medicine
2. Fellowship in Dialysis
3. Diploma in Hospital Administration
4. Certificate Course in Healthcare Quality 
Management
5. Fellowship in Neurological Rehabilitation
6. Fellowship in Orthopaedic Rehabilitation
7. Fellowship in Sports Sciences - physical 
therapists, sports nutritionists
8. Fellowship in Applied Nutrition
9. Master of Science (Dietetics and Food Services Management)
10. DIALYSIS TECHNICIAN EDUCATION for CERTIFIED HEMODIALYSIS TECHNOLOGIST
11. ICU Assistant
12. Physiotherapy Assistant
13. Operation Theatre
14. Patient Assistant
15. Diploma in Cardiovascular & Thoracic Nursing
16. Diploma in Neuro Nursing.
17. BMIT (Bachelor In Medical Imaging 
Technology)
18. BMRHIT (Bachelor in medical records & health information technology)
19. BACT (Bachelor In Anaestheisa & Critical Care Technology)
20. Diploma In Operation Theatre ‘ Technician
21. Diploma in Hospital Administration
22. Executive MBA in Healthcare Management
23. MBA in Healthcare Services
இவ்வாறு பல்வேறு முக்கிய மருத்துவத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.  அனைவரும் எம்பிபிஎஸ் படிப்பு தான் படிக்க வேண்டுமென்றால் அதை தவிர்த்த மற்ற மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் போய்விடுவார்கள்.  அதனால் மருத்துவத்துறையில் உள்ள மற்ற சிறப்பு வாய்ந்த படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com