வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 135

சரி, pommies என்ற சொல் எப்படி தோன்றியது?
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 135

சர்வர்: சரி, pommies என்ற சொல் எப்படி தோன்றியது?

புரொபஸர்: இது Saffers, Kiwis போல ஏற்றுக் கொள்ளப்பட்ட சொல் அல்ல. இது சிறுமைப்படுத்தும் சொல். அதாவது derogatory term. A pejorative word.

சர்வர்: ஓ...

புரொபஸர்: ஆமாம். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிரிட்டீஷ்காரர்களை மட்டம் தட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.

சர்வர்: எப்படி?

புரொபஸர்: Pommies என்பது பன்மை. ஒருமை டர்ம். இச்சொல்லின் வேரை தேடிப் போனால் வெவ்வேறு வேடிக்கை கதைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு கதை இது Prisoners of Mother England எனும் பகடியான சொற்றொடரின் abbreviation என்கிறது.

சர்வர்: அதில் என்ன பகடி உள்ளது?

புரொபஸர்: பிரிட்டீஷ்காரர்கள் இன்றும் மன்னராட்சியை வழிபடுகிறார்கள். இன்றும் கூட அங்கே மகாராணி என ஒருவர் இருக்கிறார். ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த சமூக மதிப்பு உள்ளது. சார்லஸ்--டயானா காதல் கதையை பிரிட்டீஷ் சமூகம் அப்படி கொண்டாடித் தீர்த்தது; அதற்காக அவ்வளவு கண்ணீர் வடித்தது! இது வேறெந்த நாட்டிலும் நடக்காதது. இதனாலே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற முன்னாள் பிரித்தானிய காலனிய நாடுகளின் மக்களுக்கு இங்கிலாந்து மீது நக்கல் சற்று உண்டு. அதனாலே மகாராணியின் கைதிகள் எனும் பொருளில் இச்சொல்லை உருவாக்கினார்கள் என ஒரு கதை உள்ளது.

சர்வர்: ஏன் நம்மூரில் பிரிட்டீஷ்காரர்கள் மீது அப்படியான பகடி இல்லை?

புரொபஸர்: ஏனென்றால் நாம் இன்றும் காலனிய மனநிலையுடனே இருக்கிறோம். பிரிட்டீஷ்காரர்கள் நல்ல ஆட்சியாளர்கள், அவர்களால் நிறைய நன்மைகள் விளைந்தன என நம்புகிறவர்கள் இங்கு ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்தினரும் அப்படி அல்ல. அங்குள்ள வெள்ளையர்கள் இங்கிலாந்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆக அவர்களுக்கு தம் முன்னோடிகளின் மரபார்ந்த நிலைப்பாடு மீது பகடி அதிகம்.

சர்வர்: ஓ... இப்போது புரியுது சார்.

புரொபஸர்: இந்த சார் எனும் அழைப்பே நமக்கானது. ஆஸ்திரேலியர்கள் இப்படி சுலபத்தில் மரியாதைக்காக சார் என விளிக்க மாட்டார்கள். நம்மிடம் colonial hangover இன்றும் அதிகம்.

ஜூலி: நான்... நான் pommies பற்றி இன்னொரு கதையை கேள்விப்பட்டிருக்கிறேன்.

சர்வர்: என்ன?

ஜூலி: இக்கதைப்படி மாதுளம் பழத்தில் இருந்தே இச்சொல் தோன்றியது.

சர்வர்: மாதுளம் பழமா?

ஜூலி: ஆமாம். Pomegranate.

சர்வர்: ஓ...

ஜூலி: ஆமாம். இந்த இங்கிலாந்துக்காரர்கள் குளிரான பருவச்சூழலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஆஸ்திரேலியாவின் வெக்கையான சூழலில் வெயிலில் நடக்கும் போது வாடிப் போகிறார்கள் சிவந்து ரோஜா போல ஆகிறார்கள்.

சர்வர்: நம்மூரில் கூடத் தான் வெள்ளையர்கள் அப்படி சிவந்து போகிறார்கள்.

ஜூலி: ஆமாம். ஆனால் ஆஸ்திரேலியர்களுக்கு இது மாதுளச் சிவப்பை நினைவுபடுத்துகிறது. மாதுள ஒப்பீடு வேடிக்கையானது என்பதால் அது நிலைக்கவும் செய்கிறது. Pomegranate சுருங்கி Pom ஆகிறது. 

சர்வர்: ஹா... ஹா... இனி யாராவது மாதுளம் ஜூஸ் ஆர்டர் பண்ணினால் எனக்கு இது தான் நினைவு வரும். 

ஜூலி: பிரிட்டீஷ்காரர்களுக்கான இன்னொரு பெயரும் ஜூúஸாடு சம்பந்தப்பட்டது தான். Limey

சர்வர்: லைம் ஜூஸா?

ஜூலி: ஆமாம். 

சர்வர்: மஞ்சளாய் இருப்பதாலா?

ஜூலி: இல்லை... இல்லை. இது 19ஆம் நூற்றாண்டில் தொடங்கி ஆங்கிலேய கடற்படையினர் இடையில் புழங்கிய சொல். Lemon-juicer  என்பதன் சுருக்கமே Limey. அந்த காலத்தில் பிரித்தானிய கடற்படை வீரர்களுக்கு தினமும் ரம்மில் எலுமிச்சை சாறு கலந்து கொடுப்பார்கள். ஏனெனில் அப்போது வைட்டமின் "சி' குறைபாட்டால் கடற்படை வீர்ர்களுக்கு scurvy எனும் எலும்பு நோய் ஒன்று பரவலாகி இருந்தது. இதற்கு தீர்வாகத் தான் வைட்டமின் "சி' அதிகம் உள்ள எலுமிச்சை சாறை அவ்வாறு கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இது ஸ்கர்வி நோயையும் சுட்டுவதால், எலும்பும் தோலுமான பலவீனமான பிரித்தானிய கடற்படையினரின் சித்திரத்தை தருவதால், அமெரிக்காவில் இச்சொல் பிரசித்தமாகியது. எந்த அளவுக்கு என்றால் அமெரிக்க நாளிதழ்களில் தலைப்பு சேதியில் Lymey எனும் சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு. அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியர் மீது கடுப்பு அதிகம். பின்னவரிடம் போரிட்டுத் தானே அவர்கள் தம் தேசத்தை அடைந்தார்கள்.

சர்வர்: இவ்வளவு வரலாறு இதன் பின்னால் உண்டா? சரி அதென்ன juggernaut rolls on?  ஏன்ம்க்ஷப்ங்க் எனும் சொல் கிரிக்கெட்டில் எப்படி பயன்படுகிறது என்பதை விளக்க ஓர் உதாரண வாக்கியம் சொன்ன போது அச்சொல்லை பயன்படுத்தினீர்களே?

புரொபஸர்: அதுவா? அது இந்திய மொழியில் இருந்து தோன்றிய ஆங்கிலச் சொல் தெரியுமா?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com