வாழ்க்கைத் தொழிலுக்கு வழிகாட்டும் இணையதளம்

ஒருவனுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவனது தொழிலே முதற்காரணமாக இருக்கிறது.
வாழ்க்கைத் தொழிலுக்கு வழிகாட்டும் இணையதளம்

ஒருவனுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்கு அவனது தொழிலே முதற்காரணமாக இருக்கிறது. இளம்வயதினருக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குறிப்பிட்ட சில தொழில்களை மட்டும் முன்னிலைப்படுத்தி, அதனைச் செய்தால் வளமான வாழ்க்கை வாழலாம் என்று வழிகாட்டுகின்றனர். இளைஞனின் ஆர்வம், செயல்திறன், தனித்தன்மை, சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் சொல்லப்பட்ட பெரும்பான்மையான தொழில் வழிகாட்டல்கள் தவறுதலாகவே போய்க் கொண்டிருக்கின்றன. இதே போன்று, பல இளைஞர்கள் தங்கள் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் தேர்வு செய்யும் தொழிலையே தங்கள் வாழ்க்கைக்கான தொழிலாகத் தேர்வு செய்து தோல்வியைச் சந்தித்து வருகின்றனர். 
இந்நிலையில் இளைஞர்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் தொழில்களைத் தேர்வு செய்திட வழிகாட்டும் வகையில் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்த இணையதளத்தில் Accounting Careers, Administration Careers,  Advertising Careers ,  Agriculture Careers,  Analyst Careers,  Arts Careers,  Banking Careers,  Business Careers, Call Center Careers,  Construction Careers,  Consultant Careers,  Designing Careers,  Engineering Careers, Entertainment Careers, Environmental Careers, Fashion Careers, Finance Careers, Government Careers,  HealthCare Careers,  Hospitality Careers ,  Human Resource Careers, Insurance Careers, Information Technology Careers, Legal Careers, Maintenance Careers, Management Careers,   Media Careers,  Medical Careers,  Nursing Careers,  Oil Careers,  Pharmaceuticals Careers,  Real Estate Careers,  Research Careers,  Sales and Marketing Careers,  Security Careers,  Social Work Careers,  Sports Careers,  Teacher Careers,  Technician Careers, Telecom Careers, Training Careers, Transportation Careers, Uncategorized, Warehouse Careers எனும் முதனமைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 
இந்தத் தலைப்புகளில் சொடுக்கினால், அத்தலைப்புடன் தொடர்புடைய பல்வேறு தொழில்கள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இக்கட்டுரைகளில் தொழில் குறித்த செய்தி, தொழிலுக்கு இருக்கும் வாய்ப்புகள், தொழிலுக்குத் தேவையான கல்வி போன்ற பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. 
இவை தவிர, areer Change Career Coaching, Career Counseling, Career Guidance, Career tests எனும் தலைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. 
தொழில் மாற்றம் எனும் தலைப்பில், தொழில் மாற்றத்திற்கான குறிப்புகள், ஆலோசனைகள், அறிவுரைகள், குறிப்பிட்ட வயதுக்குப் பின்பான தொழில் மாற்றங்கள் என்பது உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன. தொழில் பயிற்சி எனும் தலைப்பில், விளையாட்டுப் பயிற்சி, நிருவாகப் பயிற்சி, நிறுவனப் பயிற்சி, தொழிலாளருக்கான பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. 
தொழில் கலந்தாய்வு எனும் தலைப்பில், தகவல் தொடர்புத் திறன், தொழில் கலந்தாய்வுப் பயிற்சிகள், தொழில் கலந்தாய்வுக் கல்வி நிறுவனங்கள், தொழில் கலந்தாய்வுச் சேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் கலந்தாய்வுகள் என்பது போன்ற பல தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டிருக்கின்றன. தொழில் வழிகாட்டி எனும் தலைப்பில், வேலைவாய்ப்பின்மைக் காலத்தில் தொழில்திறனை எப்படி வளர்த்துக் கொள்வது? வேலைத் தேடலுக்கு உதவும் சமூகத்தளங்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. 
தொழில் சோதனைகள் எனும் தலைப்பில், தொழில் தேர்வுச் சோதனை, தொழில் வாய்ப்புச் சோதனை, தொழில் பொருத்தத் தேர்வு, மாணவர் தொழில் தேர்வு, தொழில் மதிப்பீட்டுச் சோதனை, தொழில் உருவாக்கத் தேர்வு, எவையெல்லாம் சிறந்த தொழில் சோதனைகள் என்பன போன்ற பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. 
நம்முடைய திறனுக்கும், சூழலுக்குமேற்ற தொழிலைத் தேர்வு செய்து வாழ்க்கையில் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைய விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்த இணையதளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் http://www.careerguidance.com எனும் இணைய முகவரிக்குப் பயணிக்கலாம். 
- தேனி மு. சுப்பிரமணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com