இணைய வெளியினிலே...

தினமும் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள் நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

செல்லும் இடமெல்லாம் 
எனக்கு மெளனத்தையே 
தந்துவிட்டுச் செல்கிறாய்.
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் 
உன் மெளனத்தை 
என்ன செய்வது?


தினமும் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள் நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள். பெற்றுக் கொள்வதில் கவனம் கொள்வது நம் மனசின் கைகளில். நேற்று என் கைபேசி சட்டென உறைந்து போனது. (ஏஹய்ந்). பழுது பார்த்த இளைஞர் சொன்னார்:

""தேவையற்ற பலவற்றை உங்களையும் அறியாமல் உங்கள் மொபைலில் சேமித்து வைத்திருக்கிறீர்கள் சார்! அதான் போன் திணறுது! தேவையானதை ள்ஹஸ்ங் பண்ணிட்டு போனை ச்ர்ழ்ம்ஹற் பண்ணிடுங்க! போன் புதுசாயிடும். வேகமா சுறுசுறுப்பாயிடும். அட... நம்ம மனசும் ஸ்மார்ட் போன் மாதிரிதானே! மனச ச்ர்ழ்ம்ஹற் பண்றது வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்!? மனச ச்ர்ழ்ம்ஹற் பண்ணுங்க ச்ழ்ண்ங்ய்க்ள்.

- நேசமிகு ராஜகுமாரன்

மேயாத மான்கள் 
மேய்ச்சல் பற்றிப் 
பேசிக் கொண்டிருக்க, 
மேய்ந்த மாடு 
அசை போட்டபடி
பார்த்துக் கொண்டிருக்கிறது.

- வதிலை பிரபா

குயில்களின் பாடல்களை
கொன்று போடுவதற்கு
முன்பு வரை
அந்த நான்கு வழிச்சாலை 
பாடல் பெற்ற 
தலமாகத்தான் இருந்தது. 

- ப.கவிதா குமார்


சுட்டுரையிலிருந்து...

ஏழு கோடைகள் கழிந்த பின்னும்
நீ என் கன்னுக்குட்டிதான்.
ஒரே வித்தியாசம்
வைக்கோல் அடைக்கப்பட்ட
பொம்மை கன்னுக்குட்டி.

- நிலாரசிகன்


தெரியாதவங்க காறித் துப்பினாலும் ஏத்துக்கிற சமூகத்திற்கு
தெரிஞ்சவங்க திட்டுனா மட்டும்
கோபம் பொத்துக்கினு வர்றதே...
இதென்ன உளவியல்?

- ததாகதத்தர் 

பெருஞ்சோகமில்லைதான்...
ஆனாலும்...
ஒரு புன்னகைக்குக் கூட 
வழியற்றுப்போவது
எத்தனை பெருஞ்சோகம்?

- பனித்துளி 

ஒரு நாளில் ஒரு பிச்சைக்காரருக்கு
ஒரு ரூபாய் பிச்சை
போட்டாலே போதும்...
அடுத்து நம்மிடம் வரும்
அத்தனை பிச்சைக்காரர்களையும்
எந்த உள்தயக்கமும் இன்றி 
கண்டுகொள்ளாமல் செல்ல...
காரணம் கிடைத்துவிடுகிறது.

- யாத்திரி

வலைதளத்திலிருந்து...

மிகை நாடி மிக்க கொளலே சாலவும் நன்று என்பதால், கஷ்டங்களையும் நஷ்டங்களையும் விட, ஆதாயங்களே மிகுதி என்ற நிலையில் டிராபிக் ஜாம் வரவேற்கத்தக்கதே.
என்னதான் நீங்கள் வேலை முடிந்து ஆவலாக வீட்டுக்குப் போனாலும், அங்கே போய் சிறிது நேரத்தில் ஏதாவது அற்பப் பிரச்னையில் சண்டை வரத்தான் போகிறது. டிராபிக் ஜாம் காரணமாக வீட்டிற்கு லேட்டாகப் போகும்போது, சாப்பிட்டோமா, கொஞ்சம் டிவி பார்த்தோமா, கண் செருகத் துவங்கியதும் படுக்கையில் சாய்ந்தோமா என்றுதான் உங்கள் "மூட்' அமையும். சண்டைக்கான காரணத்தைத் தேடுவதற்குக் கூட நேரம் கிடைக்காது.
காலையில் புறப்படும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினால், உரிய நேரத்திற்குள் உங்கள் அலுவலகத்திற்கோ, வேறு இடங்களுக்கோ போய்ச் சேர முடியாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே வழக்கமான நேரத்தை விட முன்னதாகப் புறப்படுகிற பழக்கமும், அதற்காகப் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழுகிற பழக்கமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். பாருங்கள், உங்கள் அம்மா அப்பா எப்படியெப்படியோ சொல்லியும் பாடமாகாத ஒரு பழக்கம், இப்போது உங்கள் நடைமுறையோடு படிந்தேவிடுகிறதே!
இப்படியாக இன்னும் பல நற்பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, இனி போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் இறும்பூதெய்துங்கள். http://asakmanju.blogspot.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com