கண்டதும் கேட்டதும் - 34

நீபூனாவுல இருக்குற நேஷனல் ஆர்க்ஸ் லேப்புக்கு (பிலிம் ஆவணக் காப்பகம்) போயிருக்கியா?'' என்று பரமேஸ்வரன் செüமீகனைப் பார்த்துக் கேட்டார். 
கண்டதும் கேட்டதும் - 34

நீபூனாவுல இருக்குற நேஷனல் ஆர்க்ஸ் லேப்புக்கு (பிலிம் ஆவணக் காப்பகம்) போயிருக்கியா?'' என்று பரமேஸ்வரன் செüமீகனைப் பார்த்துக் கேட்டார். 
இந்தக் கேள்வி வந்ததும் செüமீகன் திடுக்கென்று எழுத்தாளர் ராஜேந்திரகுமார் எழுதுவதைப் போன்று ""ஙே'' என்று பரமேஸ்வரனைப் பார்த்தார்.
""சார்... இன்னா நீங்க. நான் எங்க அங்கெல்லாம் போனேன். இன்னும் இந்த கோடம்பாக்கத்துல எத்தனை சந்து இருக்குதுன்னு எனக்குத் தெரியாது''
""தெரிஞ்சிக்கணும் தம்பி. நீ யாரு... இளம் இயக்குநர் இல்லையா? எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும். பூனா இன்ஸ்ட்டிடியூட்டுக்கு லெனின் சார் கூட அவரோட பிரதர் இருதயநாத் போயிருக்கார். நீயும் போவணும். உனக்குத் தான் தங்க சாவி உன் கழுத்துல மின்னுதே. அத வைச்சி இந்த மூடி வச்சிருக்குற பிலிம் உலகத்தையே ஈசியா தொறந்திடலாம்''
""சார் என் கழுத்துல செயினே இல்ல. அப்ப எப்படி அதுல தங்கச் சாவி மின்னுதுன்னு சொல்றீங்க?''
""மெதுவாப் பேசு. யாராவது கேட்டா உன்ன கேலி பண்ணப் போறாங்க''
""கேலியா... ஏன்?''
""நீ எங்கிட்ட வந்து பேசறதுக்கு உன்னால எப்படி முடிஞ்சது?''
""சாரால்லதான் நான் உங்ககிட்ட பேசுறேன்''
""அ...அதுதான் சூட்சுமம். அவர்தான் உன் கழுத்துல இருக்குற தங்க சாவி. திறக்காத சினிமா அலிபாபா குகைகூட நீ எந்த மந்திரமும் சொல்லாம திறக்க வச்சிடும். அதுதான் நீ அணிந்திருக்கும் தங்க சாவி. ஜாக்கிரதையா பார்த்துக் கொள். அது தங்கம். திருடு போவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே நீ அதனைப் போற்றிக் காப்பாற்றிக் கொள்''
""சரி... சார்... புரிஞ்சுக்கிட்டேன்''
""வீட்ல வேலை இல்லாம இருக்குறவங்கள்ள ஊர் சுத்தின்னு சொல்லுவாங்க தெரியுமா?''
""ஆமா சார்... என்னைக் கூட அப்படித்தான் வீட்டுல எல்லார்கிட்டேயும் சொல்றாங்க. எனக்கு நெறைய செலவு செஞ்சு படிக்க வச்சதா அவங்க நெனைக்குறாங்க. இப்ப எனக்கு வேலை இல்லைன்னு என்ன இகழ்ச்சியா பேசி என் கையில இருந்த லேப் டாப்பையும் பிடுங்கிக்கிட்டு என்னை வீட்டை விட்டு தொறத்திட்டாங்க. நான் லெனின் சார் கிட்ட அழுதுகிட்டே சொன்னேன். அவர் முதல்ல என்னைப் பார்த்து, "அழறதனால ஒண்ணும் நடக்கப் போறது இல்ல. நீ சொல்ற விஷயம் மிக சாதாரணம். காந்தி அடையாத துன்பமா? அவரோட தலைப்பாகையை தள்ளிவிட்டு அழுகுன முட்டை, தக்காளியால எல்லாம் அடிச்சிருக்காங்க. கோச் வண்டியில கால் வைக்குற இடத்துல உட்காரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க. நெறைய ஏச்சு சொற்கள் அவரை நோக்கி வந்துட்டே இருந்தது. ஆனாலும் அவருதான் நெனைச்சிகிட்டு இருந்த லட்சியத்தை நோக்கி பயணச்சிக்கிட்டே இருந்தாரு. அதேபோலதான் ஏசு நாதரும். அவர் அனுபவிக்காத கொடுமையா? ஆனாலும் கடைசி வரை பாழ்பட்ட மக்களின் உயர்ந்த வாழ்வினை போதித்துக் கொண்டே இருந்தாரு. நபிகள் நாயகத்தின் மேல் கற்கள் வீசப்பட்டன. ஆனால் அவர் தனது லட்சியப் பயணத்தை நிறுத்திக் கொண்டாரா என்ன? இல்லை அல்லவா? அதே மாதிரிதான் உன் லட்சியப் பாதையில நெறைய கல்லும் முள்ளும் நெறைஞ்சிருக்கும். அது இப்ப உன்னோட வீட்டுல இருந்த ஆரம்பிச்சி இருக்குது. நீ இனி வெளி உலகத்தால பாதிக்காத மாதிரி உன்னை பாதுகாத்துக்கணும். அதுக்கு நெறைய வேலை செய்யணும். இந்த லேப் தொழிலாளிங்க 24 மணி நேரம் வேலை செய்தது எனக்குத் தெரியும். அதப் போல நீயும் தூங்காது, உடலைத் தளரவிடாது காரியம் செய். நீயும் இந்த சினிமா உலகத்துல நிச்சயம் ஜெயிச்சி காட்டுவ' அப்படீன்னு சொன்னாரு''. 
"" பார்த்தியா... செüமீகன்... அதுதான் லெனின் சார்... அவர் சோர்வடைஞ்சி நான் பார்த்ததே இல்ல. தன்னோட எடிட்டிங் முடிஞ்சதுன்னு நெனைச்சி அவர் சும்மா இருந்ததே இல்ல. உடனே கஹக்ஷ -க்கு வந்து எங்களுக்கு உதவி செய்வாரு. அங்க முடிந்து ஸ்டுடியோவுல ரஷ் (தன்ள்ட்) பார்க்கும்போது ஓரமா நின்னுட்டு கவனிச்சிட்டே இருப்பாரு. அது இருக்கட்டும். உன்னை ஊர் சுத்தின்னு உங்க வீட்ல பட்டப் பெயர் கொடுத்துட்டாங்கன்னு சொன்ன இல்ல... அது இகழ்ச்சியா? புகழ்ச்சியா?''
"" புகழ்ச்சியா... அது எப்படி புகழ்ச்சி ஆகும். இகழ்ச்சின்னு தான் நெனைக்குறேன்''
""அதுதான் இல்ல. இது புகழ்ச்சி. எப்படீன்னா நல்ல படைப்பாளி நெறைய ஊர் சுத்தணும். அதுவும் ஊர்ல இருக்குற கொடி, செடி, மரம், விழுது, புல், பூண்டுன்னு எல்லாத்தையும் அனுபவிக்கணும். ரோட்டு ஓரத்துல இருக்குற குப்பை மேனி செடியும், கீழா நெல்லி செடியும் கதை சொல்லும். அப்பத்தான் உன்னால் சரியான படத்தை எடுக்க முடியும். உனக்குத் தெரியுமா? லெனின் சார் சரியான ஊர் சுத்தி. எல்லா எடத்துக்கும் போய் அங்க இருக்குற கதையெல்லாம் காவியமாக்குவாரு. காலை நேரத்துல டீக்கடை முன்னால ஒரு பெண் ஒரு சொம்பு ஏந்தி டீக்காக உயரும் கைகளைப் பார்த்து அவருக்கு வந்த எண்ணத்தை ஒரு தடவை என் கிட்டே சொன்னாரு. நான் அசந்து போயிட்டேன். இப்படிக் கூடவா மனுஷன் சிந்திப்பார்ன்னு. "இன்னைக்கு டீக்காக உயரும் கரங்கள் நிச்சயம் நாளை தன் வாழ்வின் விடுதலைக்காக உயரும்'ன்னு அவர் சொன்னது இன்னும் காதுல ஒலிச்சிட்டே இருக்குது. அதனாலதான் அவரோட படைப்பெல்லாம் இந்த சமுதாயத்துல பேசப்படுது. நீயும் அப்படிதான் இருக்கணும். எல்லாத்தையும் உத்துப் பாரு. எல்லாத்தையும் கத்துக்கோ... எல்லாத்தையும் குறிச்சி வச்சுக்கோ... நெறையப் படி.''
தனது வாத்தியார் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை கவனமா கேட்கும் மனநிலையில் செüமீகன் இருந்தான்.
""சினிமா என்பது ஒரு வேதம். வேதங்களின் தொகுப்பு. நமக்குச் தெரிஞ்ச நான்கு வேதங்கள் இல்ல அது... நாலு... நானூறு... நாலாயிரம் வேதங்கள் கொண்டது. தினந்தோறும் தன்னைமாற்றிக் கொண்டே இருக்கும் வேதம் அது. அது தோண்ட தோண்ட பொக்கிஷங்களா கெடைக்கும். ஒரு சினிமாவ ஒரு தடவை பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் மீண்டும் பார்க்கும்போது வேறமாதிரி கெடைக்கும். நாங்க செஞ்ச வேலை மிகவும் கஷ்டம்தான். ஆனாலும் நாங்க அந்த வேலையைத்தான் செய்யறோம்ன்னா அதுல கெடைக்குற சுகமே தனி. அது ஒரு சிருஷ்டி உலகம்''
""சில நேரத்துல பிலிம் டெவலப் செய்து முடிஞ்சதும் பக்கத்தில் இருக்கும் தியேட்டரில் போட்டுப் பார்க்கும்போது நானும் போவேன். இந்த துறையோட தலைமை இல்லையா. அப்போ 
சிவாஜி கணேசன் சார் என்னைப் பக்கத்துல உட்கார வச்சிருக்குவாரு. படம் ஓடும். பார்த்து ரசித்துக் கொண்டே என் தோள் மேல கையைப் போட்டு, "என்னா பரமு... நான் இவ்வளவு அழகாவா இருக்கேன்' என்று சிரித்து, " எல்லாம் உன் கைவேலை தாம்ப்பா' என்று பாராட்டுவாரு. ஆமாம், நடிகர் நடிகைகளை அழகா காட்டுணம்ன்னா இங்க கஹக்ஷல நெறைய வேலை செய்யணும். பலவித லைட்டிங் தாங்கி வர்ற பிலிமை சரியாக்கிக் கொடுக்கணும். இதெல்லாம்தான் வேலை'' என்று கூறி நிறுத்திவிட்டு மீண்டும் தொடங்கி, ""ஒரு கவிதை சொல்றேன் கேளு. இத எங்க லெனின் சார்தான் காண்பிச்சி என்னைப் படிக்க வச்சாரு. அது அப்படியே மனப்பாடம் ஆயிடுச்சி. எனக்குத் தமிழ் சரியான பரிச்சயம் இல்லன்னாலும் கவிதைகளே படிக்கிறது பிடிக்கும். ஓய்வு நேரத்துல எங்க லெனின்சார் கொடுக்குற புத்தகங்களைப் படிப்பேன். உனக்கு லெனின் சார் எனக்கு புத்தகங்களைக் கொடுக்கறதப் பத்தி சொல்லி இருக்கேன் இல்லையா? அவரு புத்தக வெளியீட்டுக்குப் போனா கொறைஞ்சது மூணு புத்தகமாவது காசு கொடுத்து வாங்கிட்டு வருவாரு. அவரு ஒண்ண வைச்சிக்கிட்டு மீதி ரெண்டையும் அப்ப யார் அவர் கண்ணுல படறாங்களோ அவங்களுக்கு கொடுத்துடுவாரு. "மூணு புத்தகங்களை காசு கொடுத்து வாங்கினா அந்த படைப்பாளி எவ்வளவு கஷ்டத்துல புத்தகத்த போட்டாரோ அவருக்கு காசு போய்ச் சேரும் இல்லையா?'ன்னு கேட்பாரு. "அது சரி ஏன் புத்தகத்தை இரவல் தர்ரீங்க?'ன்னு கேட்டா, "புத்தகம் ஒரு காந்தம் மாதிரி. படிக்காதவன் கையில கெடைச்சாக் கூட அவன் தன் வீட்டுல இருக்குற டேபில் மேல வைச்சிட்டா அது அவரைப் பார்த்து என்னைப் படி... என்னைப் படின்னு தொல்லை செய்யும். சில நாள்ல அவரு படிப்பாரு. ஒரு பக்கம், இரண்டு பக்கம்ன்னு படிச்சி முழு புத்தகத்தை முடிக்கும்போது அடுத்த புத்தகம் படிக்கத் தேடுவாரு. வீட்டுல இல்லன்னா கடையில போய் வாங்கி படிக்க தொடங்குவாரு. அதோட அவரோட புத்தக பயணம் தொடங்கிவிடும்' என்று கூறி சிரிப்பார். செüமீகன் இதெல்லாம் யாரால்ல முடியும். அதுக்குன்னு ஒரு பிறப்பு வேணும் போலன்னு நெனைச்சிக்குவேன்'' பரமேஸ்வரன் நிறுத்தினார்.
""சரி ஒரு கவிதை சொல்றேன்னு சொன்னேன் இல்லையா? அது பாரதிதாசனோட கவிதை. அதோட தலைப்பு, "சிரித்த முல்லை'. இதை லெனின் சார் எங்கிட்ட அடிக்கடி சொல்லி அதற்கு அர்த்தமும் கூறுவார். எட்டு வரிகள் கொண்டது அது. அத சொல்றேன் கேட்டுக்கோ... 
மாலை போதில் சோலையின் பக்கம்
சென்றன். குளிர்ந்த தென்றல் வந்தது.
வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது.
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து 
குலுக்கென்று சிரித்தது முல்லை
மலர்க்கொடி கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேனே!''
பரமேஸ்வரன் தனது மலையாளம் கலந்த தமிழில் கூறியது கவிதைக்கு அழகூட்டுவதாக அமைந்திருந்தது. இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த நான், இந்தக் கவிதையைக் கேட்டுப் பரவசமடைந்தேன். நான் என்றோ அவரிடம் கூறிய கவிதையை இப்போது திடீரென ஏன் பரமேஸ்வரன் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி என்ன கூறப் போகிறார் என்று நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். 
பரமேஸ்வரன் தொடர்ந்தார்.
""செüமீகன் நான் சின்ன வயசிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு வந்தவன் இல்லையா. அதனால லெனின் சார் கிட்டயே இதுக்கு அர்த்தம் கேட்டேன். அவர் கூற கூற நான் காட்சிப்படுத்திப் பார்த்தேன். என்ன சுகம் அது. இந்த கவிதையின் அழகை நாம் பேசித்தான் தீர வேண்டும். பொழுதோ மாலை நேரம். எழுத்தாளர் அங்கிருந்த சோலைப் பக்கம் வருகிறார். அவர் மீது குளிர்ந்த தென்றல் வீசுகிறது. அந்த காற்றில் மணம் கமழ்கிறது. எப்படி காற்றில் வாசம் வந்ததென திரும்பிப் பார்க்கிறார். அங்கு பச்சை பட்டுடை பூண்ட படர்ந்து கிடக்கும் முல்லை மலர் கொடியைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேனே என்று கூறுகிறார். அதிலும் அந்த கொடி போட்டிருந்தது சொக்கு பச்சை பட்டுடை என்று எழுதுகிறார். பச்சை நிறம் மனதைச் சொக்க வைக்கும் நிறம் என்று கவிஞர் முடிவாகக் கூறுகிறார் என்றுதானே அர்த்தப்பட வேண்டியுள்ளது''
பரமேஸ்வரன் பச்சையைப் பற்றி கூறியதும் எனக்கு நிறைய விஷயங்கள் பச்சை நிறப் பொருளைப் பற்றி நினைவுக்கு வந்தன. 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com