வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 125

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்கு செல்கிறார்கள். Negotiate என்ற சொல் எப்படி நரி வேட்டையர்களின் பேச்சுவழக்கில் இருந்து உருவாகியது என ஜூலி விளக்குகிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 125

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்கு செல்கிறார்கள். Negotiate என்ற சொல் எப்படி நரி வேட்டையர்களின் பேச்சுவழக்கில் இருந்து உருவாகியது என ஜூலி விளக்குகிறது.
ஜூலி: அந்த காலத்தில் வேட்டைக்காரர்கள் குதிரை மீதேறி வனங்களுக்கும் புதர்காடுகளுக்கும் சென்று நரிகளை வேட்டையாடுவார்கள். அப்போது நேரான பாதைகள் இருக்காது. புதர், பெரிய கற்கள் என பல தடைகள் மீது ஏறிப் பாய்ந்து கடந்து போக வேண்டும். இந்த தடையை தாண்டுவதை இந்த வேட்டைக்காரர்கள் negotiate என அழைத்தார்கள். பின்னர் இதுவே இரு தரப்பினர் தம் மாறுபாடுகளைக் களையும் வண்ணம், தடைகளைத் தாண்டி, விவாதித்து பேரம் பேசுவதை சுட்டும் சொல்லாக ஷேக்ஸ்பியர் 
மாற்றினார்.
கணேஷ்: ஜூலி நீ சொன்னதில் இன்னொரு சொல் கூட வித்தியாசமாக இருந்தது ம்ஹக் என்னமோ...
ஜூலி: அது madcap. Madcap என்றால் சரியான திட்டமிடல் இன்றி படுமுட்டாள்தனமாய் பொறுப்பின்றி ஒரு விசயத்தை செய்வது. Mad என்றால் தெரியுமில்லையா? இந்த cap இச்சொல்லில் வந்த கதை ஆச்சரியமானது. 16ஆம் நூற்றாண்டில் 
மனநலம் சரியில்லாதவர்களுக்கு ல்pith helmetகள் அணிவிக்கும் வழக்கம் இருந்தது. அதாவது பழைய படங்களில் வேட்டைக்காரர்கள் அணிவார்களே, அந்த டைப் தொப்பி. ஆகையால் பைத்தியத் தொப்பி அணிந்தவர்கள் என பொருள்பட இச்சொல் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அறிமுகமாகி பின்னர், எல்லா வேடிக்கை விசித்திர காரியங்களையும் குறிக்கும் சொல்லாகியது. 
புரொபஸர்: கரெக்ட் ஜூலி. ஆனால் இந்த mad என்ற சொல்லை பைத்தியக்காரத்தனம் எனும் பொருளில் பயன்படுத்துவது பிரிட்டீஷ்காரர்களுக்கு உரித்தானது. அமெரிக்க ஆங்கிலத்தில் யாராவது கடுப்பாகி கத்துவதைத் தான் mad என்பார்கள். Don’t get mad at me for saying that this is foolish. (சர்வர் தட்டில் காப்பி டம்ளர் ஏந்தி வருகிறார். காப்பியை புரொபஸர் முன் வைக்கிறார்) ஜூலி சர்வரிடம்: உன் கெர்ல்பிரண்ட் பெயர் ராக்கி தானே?
சர்வர் உற்சாகத்தில் துள்ளுகிறான்: சார் உங்க நாய் ஒரு ஜீனியஸ். என் நண்பர்களுக்குக் கூட தெரியாத விசயத்தை அது கண்டுபிடிச்சிருச்சு.
ஜூலி: இதெல்லாம் ஒண்ணும் பெரிசில்ல. எனக்கு இது போல பல காரியங்கள் தெரியும். 
சர்வர்: வாவ்... எப்படித் தெரியும்? வேறென்னெல்லாம் தெரியும்? ராக்கி இப்போ என்ன நினைக்கிறாள், என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாள் என உனக்கு சொல்லத் தெரியுமா?
ஜூலி: சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பு நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியாய் விடை சொன்னால் உன்னிடம் ராக்கியின் பெயர் எனக்கு எப்படித் தெரியும் எனும் ரகசியத்தை வெளிப்படுத்துகிறேன்.
சர்வர்: Ok. Go ahead.
ஜூலி: ஆனால் ஒரு சின்ன சிக்கல். There is a catch.
கணேஷ்: அதென்ன catch?
ஜூலி: வெளிப்படையாக தெரியாத ஒரு மறைந்திருக்கும் சிக்கல். 
சர்வர்: என்ன சவால்னாலும் ஏத்துக்கிறேன்.
ஜூலி: நான் கேட்கிற கேள்விகளில் குறைந்தது மூன்று கேள்விகளுக்காவது நீ சரியா பதில் சொல்லணும்.
சர்வர்: தப்பா சொல்லிட்டா?
ஜூலி: உன் காதலியோட தலை சுக்குநூறாக வெடிச்சு சிதறிடும்.
சர்வர்: ஐயோ என்னால அதை தாங்க முடியாதே. அதுக்குப் பதிலா என் தலை வெடிக்கிற மாதிரி செய்ய முடியாதுங்களா?
ஜூலி: ம்ஹும்... உன் தலை யாருக்கு வேணும். You have a choice. பயமா இருந்தால் you can quit.
கணேஷ்: Quit என்றால் வேலையை ராஜினாமா பண்றதில்லையா?
ஜூலி: அது ஓர் அர்த்தம். இன்னொரு பொருள் ஒரு செயலை நிறுத்துவது. உதாரணமா, I quit smoking this morning, she claimed over a glass of beer.  இன்னொரு பொருள் ஓர் இடத்தை நிரந்தரமாக காலி பண்ணிக் கொண்டு போவது. As a few chain hotels were opened in the Triplicane, the local messes had to quit.  வாடகை வீட்டை காலி பண்றதையும் இச்சொல்லால் குறிப்பிடலாம். (சர்வரை நோக்கி) என்ன தம்பி ரெடியா? எதுக்கும் தலை இல்லாம உன் ராக்கியை கற்பனை பண்ணிப் பார்த்துக்கோ
சர்வர் பதற்றமாய் நகம் கடித்தபடி: இல்ல நல்லா யோசிச்சிட்டேன். நான் எப்படியாவது ராக்கியோட தலையை காப்பாத்திடுவேன். ஏன்னா எனக்கு அவள் மீது இருப்பது சாதாரண லவ் இல்ல...
ஜூலி: ஆத்மார்த்த காதல். அதானே?
சர்வர்: ஆமா! எப்படி இவ்வளவு கரெக்டா?
ஜூலி: இரு... இரு... கேள்விகள் ஆரம்பிக்கட்டும். அப்போ பார்க்கலாம் ஆத்மார்த்தமா இல்லையான்னு.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com