இணைய வெளியினிலே... 

தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை "டெண்ட் கொட்டகை' என்கிறார்கள்.
இணைய வெளியினிலே... 

முக நூலிலிருந்து....
• ஹீரோ வாகன விளம்பரங்களில் "முற்போக்கான எஞ்சின்' என்றொரு தகுதி சொல்லப்படுகிறது. எஞ்சின் கூட முற்போக்காகச் செயல்பட முடியுமா என்று ஆச்சரியம் ஏற்பட்டுவிட்டது. 
அது ல்ழ்ர்ஞ்ழ்ங்ள்ள்ண்ஸ்ங் ங்ய்ஞ்ண்ய்ங் என்ற ஆங்கிலச் சொற்றொடருக்கான தமிழாக்கம் என்பதைப் பின்னர் புரிந்து கொண்டேன். அதாவது படிப்படியாக வேகம் எடுக்கும் திறனைச் சொல்கிறார்கள். 
என்னே தமிழ்!
- வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்

• நீ என்னைப் புறக்கணிப்பதாய் நடிக்கிறாய்...
நான் அதை கண்டு கொள்ளாத மாதிரி 
நடிக்கிறேன்... 
நம்மையும் அறியாமல் நாம்
நம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்,
ஒவ்வொரு நொடியும்.
- பெ. கருணாகரன்

• தப்பு செய்றதுக்கு 
சாமர்த்தியம் 
தேவையில்லை...
அதை 
நியாயப்படுத்துறதுக்கு தான்
அதிக சாமர்த்தியம் தேவை.
- இந்திரா கிறுக்கல்கள்

• குட்டி நட்சத்திரங்களைச் 
சலித்தெடுத்து
ஒழுக விட்ட 
இரவுச் சல்லடை...
சூரியனைத் 
தக்க வைத்துக் 
கொள்கிறது
- டிகே கலாப்ரியா

சுட்டுரையிலிருந்து...
• நாமென்னவோ 
ஆசைதான் பட்டோம்.
புத்தன் பேராசைப்பட்டான்...
நம்மைத் திருத்த.
- செல்லக்கிளி நாச்சியார்

• எப்போதும் 
நிரம்பி வழிகிறது
சிலரின் அட்ஷய பாத்திரம்...
என்ன செய்தாலும்,
நிரம்புவதே இல்லை
பலரின் 
பிச்சைப் பாத்திரம்.
- சுபா 

• அருகில் இருக்கும் நண்பர்களை 
மறக்கச் செய்த பெருமை, 
இந்த ஸ்மார்ட் போன்களுக்கே சேரும். 
உடனிருக்கும் நண்பர்களைத் 
தூரமாக்கிவிட்டு, 
இணையத்தில் நண்பர்களைச் சேர்த்த 
முதல் தலைமுறையினர் நாம்தான்.
- சக்திமான்

• தன்னை யாரும் பார்க்கவில்லை என்று அறிந்த உடன்
குழந்தைகள் அழுகையை நிறுத்தி விடுகின்றன.
- சித்ரா தேவி

வலைதளத்திலிருந்து...
தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை "டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றிலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முட்டுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.
ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.
காட்சி தொடங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.
https://wannanilavan.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com