2017-ஆம் ஆண்டின் சிறந்த "ஆப்' !

2017-ஆம் ஆண்டை கடந்து 2018-இல் அடியெடுத்து வைத்துள்ளோம்.
2017-ஆம் ஆண்டின் சிறந்த "ஆப்' !

2017-ஆம் ஆண்டை கடந்து 2018-இல் அடியெடுத்து வைத்துள்ளோம். தொழில்நுட்ப வளர்ச்சியில் கடந்த காலங்கள், கண்டுபிடிப்புகளின் வரலாறாக மாறுவதால் அவைமுக்கியத்துவம் பெறுகின்றன.

விளையாட்டு, கலை, அறிவியல், விஞ்ஞானம், கல்வி, முதலீடு, செய்தி போன்ற பல்வேறு துறைகளுக்காக தனிச்சிறப்பான ஆப்ஸ்கள் (அடட)பல ஆயிரம் இருந்தாலும், 2017-இன் சிறந்த ஆப்பாக கூகுள் பிளே ஸ்டோர் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ள ஆப் எது தெரியுமா? 

SOCRATIC(சாக்ரடிக்) எனும் கணக்கு பாட கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆப்தான் அது.

விடைகாண வேண்டிய கணக்கு கேள்வியைப் படம் பிடித்து இந்த ஆப்பில் போட்டால் போதும், அந்த கணக்கின் விடை படிப்படியாக விடையளித்து அசத்திவிடுகிறது இந்த சாக்ரடிக் ஆப். செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் - ஏஐ) மூலம் இந்தப் பணியை சாக்ரடிக் ஆப் கச்சிதமாகச் செய்து விடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மொபைல் போன்களில் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பெற்றோர்களின் மொபைல் போன்களிலும் இந்த ஆப் இடம் பெற்றுள்ளது. 

வெறும் கணக்கு பாடத்துடன் மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, அறிவியல், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள கேள்விகளுக்கும் இந்த சாக்ரடிக் ஆப் பதில் அளிக்கிறது. 

இந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சாக்ரடிக் ஆப்பின் அபார செயல்திறனைக் கண்டு வியப்படைந்துள்ள கூகுள் நிறுவனம், "2017- ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு; சிறந்த பயன்பாட்டு ஆப்' என்று பட்டம் அளித்துள்ளது. "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 2017-ஆம் ஆண்டில் இதுபோன்ற சிறந்த கண்டுபிடிப்பு வரும் என எதிர்பார்க்கவில்லை' என்று கூகுள் நிறுவனம் சாக்ரடிக் ஆப்-புக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

இதைத் தவிர வானிலை முன்னறிவிப்பை தெரிவிக்கும் WHAT THE FORECAST ஆப் மற்றும், விளையாட்டுப் பிரியர்களை வசீகரம் செய்த SUPER MARIO RUN App-உம், சுற்றுலா விரும்பிகளை கட்டி இழுத்த ARTPASSPORTApp-உம், தினந்தோறும் கணினி பணிகளைப் பதிவு செய்து பணியாற்ற உதவும் TODOIST App-உம் 2017-ஆம் ஆண்டின் சிறந்த ஆப்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்த புத்தாண்டிலும் ஏஐ தொழில் நுட்பத்துடன் ஆப்-களின் வளர்ச்சி வேறு கட்டத்தை அடையும் என்றே எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com