திறன்களை அங்கீகரிக்கும் அறிவியல் திருவிழா!

இளைஞர்களின் திறனை வெளிப்படுத்தவும், குழு முயற்சியின் விளைவை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து கொள்வதற்காகவும்
திறன்களை அங்கீகரிக்கும் அறிவியல் திருவிழா!

இளைஞர்களின் திறனை வெளிப்படுத்தவும், குழு முயற்சியின் விளைவை இன்றைய இளைஞர்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். 
கோயம்புத்தூரில் மாநில அளவிலான அறிவியல் திருவிழா மாணவர்களின் திறன்களை அங்கீகரிக்கும் வகையிலும், அறிமுகப்படுத்தும் வகையிலும் குறும்படம் உருவாக்குதல், மீம்ஸ் உருவாக்குதல், கவிதை உருவாக்கம், ஓவியம் உருவாக்கம் போன்ற போட்டிகளை நடத்துகிறது. இதில் தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
"எங்கள் தேசம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, அறிவியல் பார்வையில் "இந்தியாவை அறிவோம்' என்ற தலைப்பில் படைப்புகள் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி, ஜனநாயகம், பன்முகத்தன்மை, சமூக நீதி, சுற்றுச்சூழல், இந்திய பெருமைகள், சமூகம் போன்ற துணைத் தலைப்புகள் அமையலாம்.
குறும்படத்தைப் பொறுத்தவரை 20 நிமிடங்கள் என்ற அளவில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் குறும்படத் திருவிழாவில் திரையிடப்படும். புதிதாக உருவாக்கப்படும் குறும்படங்கள் மற்றும் 01.01.2017 க்குப் பிறகு எடுக்கப்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு தகுதியானவை. குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி யில், Pen Drive  standard format - இல் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். 
மீம்ஸ் உருவாக்கத்தைப் பொறுத்தவரை, கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், நகைச்சுவை, நையாண்டி தன்மையுடன் இருக்கலாம். ஆனால், யாரையும் புண்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் இருக்க வேண்டும். வீடியோ அதிகபட்சம் 30 வினாடிகள் இருக்கலாம். தரமான ஒலி/ ஒளிப்பதிவுடன் இருத்தல் வேண்டும்.
கவிதையைப் பொறுத்தவரை 30 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதை படைப்பாளர்கள் மட்டுமே நேரில் பங்கேற்க வேண்டும். இந்நிகழ்விற்கான புதிய உருவாக்கமாக இருக்க வேண்டும். 
ஓவியத்தைப் பொறுத்தவரை முழு சார்ட்டில் வரைய வேண்டும். வரை பொருட்களை பங்கேற்பாளர்கள் கொண்டு வருதல் வேண்டும். 90 நிமிட கால அளவில் ஓவியம் உருவாக்கப்பட வேண்டும். இதில் சிறப்பிடம் பெறும் இளைஞர்களுக்கு விருதுகளும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலைத்தளத்தில் www.taminaduscienceforumcovai.com பதிவு செய்யலாம். இப்போட்டிகள் கோயம்புத்தூர், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜனவரி 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com