வாங்க இங்கிலீஷ் பேசலாம் 148

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். போகும் வழியில் கணேஷ் a dog with two tails  எனும் சாட்டு வாக்கியத்துக்கான அர்த்தத்தை வினவுகிறான்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 148

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். போகும் வழியில் கணேஷ் a dog with two tails  எனும் சாட்டு வாக்கியத்துக்கான அர்த்தத்தை வினவுகிறான்.
கணேஷ்: அது ஓகே சார். அழகா விளக்கினீங்க. ஆனால் அது என்ன ரெண்டு வால்? ஒரு வாலை வச்சிட்டே ஜூலி ஓவரா ஆட்டம் போடுதே?
புரொபஸர்: அதான் விசயமே -ஒரு வாலைக் கொண்டே நாய் தன் மகிழ்ச்சியை இவ்வளவு லாகவமாய் வெளிப்படுத்துகிறதே, அதற்கு ரெண்டு வால்கள் இருந்தால் எப்படியான குதூகலத்தை வெளிப்படுத்தும்? இந்த கேள்வியின் விளைவாக இந்த idiom தோன்றியிருக்கலாம்.
ஜூலி: ஆனால் இந்த சொற்றொடரின் ஆதி அர்த்தம் வேறு?
கணேஷ்: அப்படியா?
ஜூலி: ஆமாம். ஆரம்பத்தில் இது "அவர் செம கெத்தாய் / தற்பெருமையுடன் நடந்து கொண்டார்' எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. நான் சொல்வது 16வது நூற்றாண்டில். அப்போது தான் இந்த சாட்டு வாக்கியம் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என்கிறார்கள். அதாவது, John Mactaggart என்பவர் எழுதிய Three Years in Canada எனும் நூலில்.
கணேஷ்: அது யார் John Mactaggart? எழுத்தாளரா / சிந்தனையாளரா?
ஜூலி: அது தான் இல்லை. அவர் ஒரு கட்டட பொறியாளர். அவர் எழுதின நூலில் தான் இது முதலில் இடம்பெற்றது. இதன் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. அது சுவாரஸ்யமானது.
அவர்கள் மருத்துவரின் உள்ளறைக்கும் முன்பான பரிசோதனை அறைக்கு செல்கிறார்கள்.
உதவியாளர்: இங்கே காத்திருங்கள்.
கணேஷ்: இங்கே யாராவது வந்து பரிசோதிப்பார்களா?
உதவியாளர்: தயவு செய்து காத்திருங்கள். (அவர் அகல்கிறார்)
புரொபஸர்: நாம் இங்கு இருந்து பேசுவது மருத்துவர் உள்ளிருந்து கவனிப்பார் - அவரது டிவியில்.
கணேஷ்: இங்கே கண்காணிப்பு கேமராக்கள் உண்டா?
புரொபஸர்: ஆமாம். நீ கண்டுபிடிக்க முடியாத இடங்களில், வடிவங்களில். 
கணேஷ்: அங்குள்ள பூஜாடி, சுவர் அலங்காரங்கள், சாம்பல் கிண்ணம் என ஒவ்வொரு பொருளாய் திருப்பி கவிழ்த்து சோதிக்கிறான்.
புரொபஸர்: உன்னால் கண்டுபிடிக்க முடியாது என்றேனே...
கணேஷ்: என்ன செய்ய?
புரொபஸர்: அமைதியா இரு
கணேஷ்: சரி இருப்போம். (ஜூலியிடம்) அதுவரை நீ கதையைச் சொல்லு
ஜூலி: சரி கேளு. he Canadas கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: Canada தெரியும் - ஒரு நாடு. 
ஜூலி: ஆமாம் அது பதினாறாம் நூற்றாண்டில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்தது. ஏழு வருடங்கள் நடைபெற்ற Seven Years War -இல் இங்கிலாந்தும் பிரான்ஸும் மோதியது. பிரான்ஸ் தோல்வி அடைந்தது. இதன் விளைவாக கனடா ஆங்கிலேயர் வசமானது. ஆனால் பிரஞ்சு மக்கள் முழுக்க அங்கிருந்து வெளியேறவில்லை. ஆக, கனடா இரண்டாய் பிரிந்தது - மேல் கனடா மற்றும் கீழ் கனடா. மேல் கனடாவில் ஆங்கிலேயர் குடியேறினார்கள். கீழ் கனடாவில் பிரஞ்சு மக்கள் வாழ்ந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் மெக்டெகார்ட் எனும் ஒரு ஸ்காட்லாந்து பொறியாளர் கனடாவுக்குச் சென்றார். அவருக்கு அளிக்கப்பட்ட பணி என்பது மேல் மற்றும் கீழ் கனடாக்களை இணைக்கும்படியாய் ஒட்டாவா நதிக்கு மேலாக ஒரு பாலம் அமைப்பது. அதுவரை இந்த நதியே இரு கனடாக்களையும் பிரித்து வந்தது. இந்த பாலத்தின் கட்டமைப்புடன் பிரிவினை நீங்கியது. ஊருக்கு திரும்பிய அந்த பொறியாளர் ஒரு புத்தகம் எழுதினார் - Three Years in Canada. இந்த புத்தகத்தில் கீழ்கண்ட வரி வருகிறது. தான் கட்டி திறந்து வைத்த பாலத்தில் ஒரு கனவான் / நிலச்சுவான்தார் பெருமையாய் நடந்து போவதை குறிக்கும் விதமாய் அவர் இவ்வாறு எழுதினார்: Off went the Laird, as proud as a dog with two tails. இது தான் இந்த சாட்டு வாக்கியம் முதலில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாறு. இங்கே நீ ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்.
கணேஷ்: என்ன?
ஜூலி: நாங்கள் நாய்கள் வாலை ஆட்டுவது மட்டுமில்லை. 
கணேஷ்: பிறகு?
ஜூலி: நாய் தன் வாலை அசைப்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதை அறிந்தால் ஜான் மெக்டெகார்ட் ஏன் அப்படி எழுதினார் என நாம் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com