லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் மெக்கானிக்!

முன்பெல்லாம் ஒரு மாடி, 2 மாடி என்றாலே மிகப்பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது சுமார் 15 அல்லது 20 மாடி என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.
லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் மெக்கானிக்!

முன்பெல்லாம் ஒரு மாடி, 2 மாடி என்றாலே மிகப்பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது சுமார் 15 அல்லது 20 மாடி என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அவற்றுக்கு லிப்ட் பொருத்தி விடுகின்றனர். மாநகரங்களைச் சொல்ல வேண்டியதே இல்லை. அங்கு 10, 15, 20 மாடிகள் என அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன. மாடிப்படிகளில் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 15, 20 மாடிகள் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது. அங்கு செல்ல வேண்டுமானால் லிஃப்ட் மிகவும் அவசிய தேவையாக உள்ளது. 
வணிக வளாகங்களில் லிஃப்ட் இருப்பதோடு எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அதனால் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் பழுது ஏற்படும் சமயத்தில் அதனைச் சரிசெய்ய அது சம்பந்தான படிப்பை படித்த மெக்கானிக் இருந்தால் மட்டுமே அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். அதனால் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. 10-ஆம் வகுப்பிற்கு பிறகு இத்தகைய லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் குறித்த படிப்பை படிக்கலாம்.
லிஃப்ட் அன்ட் எஸ்கலேட்டர் சம்பந்தமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் : 
1. Bharat Institute of Elevators,  88 Manthralaya Garden, Sengalipalayam , Coimbatore  } 641022 } http://bharatinstituteofelevators.com/
2. Sudhar}Son Lift Technology Institute, 16, SRV Main Road, SRV Nagar, Harveypatti , Madurai (Madurai Dist.) }  625005 
3. Lalji Mehrotra Technical Institute Opp. Hema Industrial Estate, Sarvodya nagar, Jogeshwari (E), Mumbai - 400060
4.  INSTITUTE OF FIRE AND SAFETY ENGINEERING & LIFT, # 16}2}753/A/1, 3rd Floor, Above Bata Showroom, Revenue 
Board Colony, Near Konark Diagnostic Centre, Dilsukhnagar, Hyderabad -  500 060. http://www.ielt.in/index.php 
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com