தன்னெஞ்சறிவது பொய்யற்க! 

நாம் அனைவருக்கும் பொய் பேசக்கூடாது என்பது தெரியும். எனினும் நாம் எப்படியோ பொய் பேசுகிறோம்.
தன்னெஞ்சறிவது பொய்யற்க! 

நாம் அனைவருக்கும் பொய் பேசக்கூடாது என்பது தெரியும். எனினும் நாம் எப்படியோ பொய் பேசுகிறோம். இன்றைக்கே நாம் பொய் பேசி இருக்கக் கூடும். பெரும்பாலான மக்கள் நாள்தோறும் 1 அல்லது 2 பொய்களைப் பேசுகின்றனர் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி பொய் பேசுவதால் உங்களது மூளை, உடல் நலம் பாதிக்கப்படும்.
 மூளையின் அதிகச் செயல்பாடு: அடிக்கடி பொய் பேசுவதால் ஏற்படும் பாதிப்புகள், உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 இதுதொடர்பாக முனைவர் ஆர்தர்மார்க்மேன் கூறியுள்ளதாவது: "நமது உதடுகளில் இருந்து பொய் புறப்பட்ட அடுத்த வினாடி நமது உடல் கார்டிசால் ஹார்மோன் திரவத்தை மூளைக்கு விடுவிக்கிறது. இதன் தொடர்ச்சியாக நமது மூளை அதிகமாகச் செயல்பட்டு உண்மை, பொய் ஆகிய இரண்டையும் நினைவில் கொள்ள முயல்கிறது. இதனால் முடிவெடுப்பது மிகவும் கடினமாகும்; கோபமும் அதிகரிக்கும். இவை அனைத்தும் நாம் பொய் கூறிய முதல் 10 நிமிடங்களில் ஏற்படும்.
 அதிகரிக்கும் மன அழுத்தம்: அடுத்து நாம் நமது பொய் குறித்து கவலைப்படத் தொடங்குவோம். பொய் சொன்னதற்காக மாட்டிக் கொள்வோம் என நினைப்போம். பொய் பேசும் நிலை ஏற்பட்டதற்கு நாம் காரணமில்லை, எதிராளியின் தவறே காரணம் என ஆறுதல் படுத்திக் கொள்வோம். அடிக்கடி பொய் பேசுபவர் அவர் கூறும் பொய்யையே உண்மையென நம்பத் தொடங்கிவிடுவார். அடிக்கடி பொய் பேசாதவர் என்றால் அதற்காக வருந்தி, பொய் பேசிய நபரைச் சந்திப்பதைத் தவிர்ப்பார்கள். இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும். கூடுதல் மன அழுத்தத்தால் ரத்த அழுத்தம் அதிகரித்தல், தலைவலி, கீழ் முதுகுவலி, வெள்ளை மரபணுக்கள் எண்ணிக்கை குறைதல் போன்றவை ஏற்டும்.
 பொய் பேசாமல் இருப்பது எப்படி? நான் நேர்மையாக இருப்பேன், பொய் பேச மாட்டேன் என நமக்கு நாமே கூறிக்கொள்ளவேண்டும். எந்த கேள்விக்கும் பதில் கூறுவதற்கு முன்பு இருமுறை சிந்திக்க வேண்டும். இதற்கு பதிலளிப்பதைத் தவிர்க்க முடியுமா அல்லது உண்மையை மறைக்க வேண்டியதிருக்குமா? என்று யோசிப்பது அடிக்கடி பொய் கூறுவதை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழி. பொய் பேசாவிட்டால் நாம் எந்தவித மன உறுத்தலோ, அழுத்தமோ இல்லாமல் இயல்பாக இருக்கலாம் என்று நினைத்துப் பாருங்கள்... பொய் பேசுவதை நிறுத்திவிடுவீர்கள்.
 - பி.சுஜித்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com