வணிக கப்பல் வேலை!

வணிக கடற்படை என்பது உலகம் முழுவதும் சரக்குகளை கப்பலில் எடுத்துச் செல்வதாகும். வணிகக் கப்பல்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சரக்குகளை எடுத்துச் சென்று அளிப்பதன்
வணிக கப்பல் வேலை!

வணிக கடற்படை என்பது உலகம் முழுவதும் சரக்குகளை கப்பலில் எடுத்துச் செல்வதாகும். வணிகக் கப்பல்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சரக்குகளை எடுத்துச் சென்று அளிப்பதன் மூலம் பல நாடுகளின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கின்றன. அதன் மூலம் எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. இந்த வணிகக் கடற்படை இல்லாவிட்டால், பெரும்பாலான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முடங்கிவிடும் அபாயமே உண்டு. இது ராணுவ கடற்படையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, வணிக சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. 
இந்திய அரசு, கடல் பொறியாளர்களை உருவாக்குவதற்காக கடந்த 1949-இல் Directorate of Marine Engineering Training (DMET) என்ற அமைப்பை உருவாக்கியது. இதில் பயில்வோருக்கு தற்போது வரை துணை ராணுவப் பயிற்சிக்கு இணையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அமைப்பு இப்போது இந்திய கடல் பல்கலைக்கழகத்தின் (Indian Maritime University-Mumbai Port Campus: IMU-MC) கீழ் உள்ள இரண்டு பிரதான கடல் நிறுவனங்களில் ஒன்றாக Marine Engineering and Research Institute(M.E.R.I) என்ற பெயரில் இயங்கி வருகிறது. மற்றொரு பிரதான கடல் நிறுவனமாக LBS College of Advanced Maritime Studies & Research உள்ளது.
இதையடுத்து, உயர் அலுவலர்களை உருவாக்கும் வகையில் கடந்த 2002-இல் Nautical & Engineering கோர்ஸ்கள் தொடங்கப்பட்டன. 2003-இல் ஐஐடி-ஜேஇஇ மூலமாக 15 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு (IMU-CET) மூலம் சேர்க்கை நடைபெற்று வருகிறது. IMU-MC (M.E.R.I)-இல் இதுவரை 200-க்கும் அதிகமானோர் அதிகாரிகளாகப் பயிற்சி பெற்று நம் நாட்டு நிறுவனங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2013-14 ஆம் ஆண்டு முதல் B.Tech (Marine Engineering) கோர்ஸும் நடைபெற்று வருகிறது.
இங்கு Post Graduate Diploma in Marine Engineering (PGDME) என்ற ஓராண்டு முழுநேர உண்டு, உறைவிட கல்வி வழங்கப்படுகிறது. இதில், ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட Mechanical/Mechanical & Automation/
Naval Architecture ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள், IMU-இல்  Naval Architecture & 
Ocean Engineering இளநிலை பட்டம் பெற்றவர்கள் சேரலாம். இதற்கான கட்டணம் ரூ.3.60 லட்சம். இந்த கோர்ஸ் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்குகிறது. 
அடுத்ததாக, 3 ஆண்டுகளைக் கொண்ட B.Sc. Maritime Science, B.Sc. Nautical Science, B.Sc. Ship building and Repair, 4 ஆண்டுகளைக் கொண்ட B.Tech Marine Engineering, B.Tech in Naval Architecture and Ocean Engineering கோர்ஸில் பிளஸ் 2-இல் அறிவியல், கணிதம் படித்தவர்கள் சேரலாம். இவையும் முழுநேர உண்டு, உறைவிடப் பயிற்சியாகும். இவற்றுக்கான ஆண்டு கட்டணம் ரூ. 2.25 லட்சம். ஆகஸ்ட் மாதம் கோர்ஸ் தொடங்கும். மேலும், Diploma in Nautical Science (DNS) leading to B.Sc (Applied nautical Science) என்ற டிப்ளமா கோர்ஸும் உள்ளது. இந்த கோர்ஸ்கள் மும்பை, கொல்கத்தா, கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய வளாகங்களில் நடைபெறும்.
இவையல்லாமல், இந்திய கடல் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் ஆ.நஸ்ரீ. ண்ய் சஹன்ற்ண்ஸ்ரீஹப் நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங், ஆ.பங்ஸ்ரீட் ண்ய் ஙஹழ்ண்ய்ங் B.Sc. in Nautical Science, B.Tech in Marine Engineering, Diploma in Nautical Science, 
MBA in Port and Shipping Management, MBA in International Transportation and Logistics Management, BBA in Logistics, Retailing and E-Commerce கோர்ஸ்களும் நடைபெறுகின்றன. தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் இந்த கோர்ஸ்கள் உள்ளன.
கடல் அறிவியல், பொறியியல் முடித்தவர்களுக்கு வணிகக் கப்பல்களில் பல வகையான பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக, இளைநிலை பொறியாளருக்கு தொடக்கநிலை ஊதியமாக மாதம் ரூ. 30 ஆயிரமும், தலைமைப் பொறியாளருக்கு தொடக்கநிலை ஊதியமாக மாதம் ரூ. 1.5 லட்சமும் வழங்கப்படுகிறது. அதேபோல, மூன்றாம்நிலை அதிகாரிக்கு மாதம் ரூ. 50 ஆயிரமும், கேப்டன் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 2 லட்சமும் தொடக்கநிலை ஊதியமாக இருக்கும். இளநிலை பொறுப்பில் இருந்து 6 முதல் 8 ஆண்டுகளில் தலைமை பொறுப்புக்கு பணி உயர்வும், அதிகபட்ச ஊதியமாக மாதம் ரூ. 8 லட்சம் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 
மாத ஊதியம் அல்லாமல், கப்பலில் தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மூத்த அதிகாரி நிலையில் உள்ளவர்கள் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள், சிகரெட், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அழகுசாதனப் பொருள்கள் சுங்கவரி இல்லாமல் வழங்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, வணிக கப்பல்படை ஊழியர்களின் ஊதியத்துக்கு வருமான வரி கிடையாது. 
இந்தியாவில், மத்திய அரசு நிறுவனமான Shipping Corporation of India மற்றும் தனியார் நிறுவனங்கள், சர்வதேச கப்பல் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. இந்திய கடல் பல்கலைக்கழகத்தின் இளநிலை சேர்க்கைக்கான இணையவழி தேர்வு வரும் மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் கடைசி வாரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கும். மே மாதம் 2-வது வாரம் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 1000. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 700. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட தேர்வு மையங்கள் உள்ளன.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com