வேலை...வேலை...வேலை...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை, இந்து சமய அறநிலையத் துறையில் வேலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை
பதவி: பேராசிரியர்
காலியிடங்கள்: 08
பதவி: கூடுதல் பேராசிரியர்
காலியிடங்கள்: 04
வயது வரம்பு: 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: இணை பேராசிரியர்
காலியிடங்கள்: 04
பதவி: உதவி பேராசிரியர்
காலியிடங்கள்: 16
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: சீனியர் ரெசிடெண்ட்
காலியிடங்கள்: 12
வயது வரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: TUTOR/ DEMONSRATORS
காலியிடங்கள்: 08
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். படிப்புக்குப் பிறகு எம்.டி./ எம்.எஸ்./ டி.என்.பி. போன்ற முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்புகளை முடித்திருக்க வேண்டும் (அல்லது) சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எஸ்.சி.க்குப் பிறகு எம்.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும். அத்துடன், பிஎச்டி யும் முடித்திருக்க வேண்டும். பேராசிரியர் பதவிகளுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250. The Director, JIPMER, Puducherry என்ற பெயரில் State Bank of India, JIPMER Branch, Puducherry-605006 கிளைக்கு செலுத்தும் வகையில் வரைவோலை எடுக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: பேராசிரியர் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வும், சீனியர் ரெசிடெண்ட் & TUTOR/ DEMONSRATORS பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.jipmer.edu.in/sites/default/files/Application%20Format%20-%20AIIMS%20Nagpur_0.pdf  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, JIPMER, Admin - I (Recruitment Cell), Dhanvantri Nagar,  Puducherry - 605 006 
மேலும் விவரங்களுக்கு: http://www.jipmer.edu.in/sites/default/files/Details%20to%20the%20various%20faculty%20post%20-%20AIIMS%20Nagpur.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-03-2018.

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
பதவி: இளநிலை மின் பொறியாளர்
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்/ எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மின் கம்பியாளர்
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பதவி: எலெக்ட்ரீசியன் 
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். மின்சார வாரியத்தின் "சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: உதவி மின் கம்பியாளர்
காலியிடங்கள்: 5
கல்வித் தகுதி: எலெக்ட்ரிகல் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: பிளம்பர்
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிற தகுதிகள்: இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அலுவலகப் பணி நேரங்களில் ரூ.50 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை சுயசான்றொப்பம் செய்து இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: இணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்-628215, தூத்துக்குடி மாவட்டம்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/employment.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 16-03-2018 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
பதவி: உதவி மேலாளர்/ துணை மேலாளர் / மேலாளர் - (டிராக்)
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: ரயில் பாதை கட்டுமானத் திட்டங்கள்/ பராமரிப்புத் திட்டங்கள்/ மெட்ரோ மற்றும் ரயில்வே திட்டங்கள் போன்றவற்றில் உதவி மேலாளர்/ துணை மேலாளர்/ மேலாளர் பதவிகளில் முறையே
5 ஆண்டுகள்/ 7 ஆண்டுகள்/ 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: இன்ஜினியர் (சேஃப்டி)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் கட்டுமான பாதுகாப்புப் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: ரயில்வே பணிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, புகைப்படத்தை ஒட்டி, சுயசான்
றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து, கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காகக் கொண்டு வர வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வுக்குப் பிறகு, மருத்துவத் தேர்வு நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: CHENNAI METRO RAIL LIMITED, CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI-600107.
மேலும் விவரங்களுக்கு: http://chennaimetrorail.org/wp-content/uploads/2018/02/CEMRL_JOB.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 17-03-2018 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் வேலை
பதவி:  Chief Risk Officer
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: நிதி, கணக்கு, புள்ளியியல், பொருளாதார பாடங்களில் முதுகலைப் பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். FRM/CFA/CA/ICWA படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முன் அனுபவம்: உள்நாட்டு & வெளிநாட்டு வங்கிகள்/ நிதி நிறுவனங்களில் குறைந்தது 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதிலிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: Market Risk Officer
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: எம்.பி.ஏ (வங்கியியல்/ நிதி) அல்லது ஐ.சி.டபிள்யுஏ/ சி.ஏ. ரிஸ்க் மேனேஜ்மெண்ட்/ ஃபைனான்சியல் ரிஸ்க் மேனேஜ்மெண்ட்/ ட்ரஷரி மேனேஜ்மெண்ட் பிரிவுகளில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 
முன்அனுபவம்: பொதுத்துறை வங்கிகளில் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்துக்குச் சென்று சான்றிதழ்களைப் பதிவேற்றி, சுயவிவரங்களைப் பதிவு செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, மின்னஞ்சல் முகவரியையும், செல்லிடப்பேசி எண்ணையும் சரியாகக் குறிப்பிட வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 (ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்)
மேலும் விவரங்களுக்கு:  https://bankofmaharashtra.in/downdocs/CRO_MRO_ADVT.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17-03-2018.
தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com