வாங்க இங்கிலீஷ் பேசலாம் 131 

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் உணவருந்திய பின் பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள். அப்போது அங்குள்ள சர்வரிடம் உரையாடும்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 131 

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிடச் சென்ற உணவகத்தில் உணவருந்திய பின் பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள். அப்போது அங்குள்ள சர்வரிடம் உரையாடும் புரொபஸர் full of the milk of kindness எனும் சொலவடை ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டு பின்னர் எப்படி பிரசித்தமாகியது என விளக்குகிறார்.

புரொபஸர்: "மெக்பெத்' என்பது 1623 இல் பிரசுரமான ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகம். அதாவது tragedy. இதில் மெக்பெத் எனும் படைத்தளபதியை அவனது மனைவி லேடி மெக்பத் நாட்டின் மன்னரைக் கொன்று விட்டு அரியணையைக் கைப்பற்றும்படி தூண்டுவாள். மெக்பெத்துக்கு அரியணை மோகம் உண்டென்றாலும் துணிச்சல் போதாது என அவன் மனைவி கருதுகிறாள். அதற்கு அவள் கூறும் காரணம் அவனுக்கு கருணை அதிகம் என்பது. இதைப் பற்றி அவள் யோசிக்கையில் சொல்கிறாள்: Yet do I fear thy nature, It is too full o' th' milk of human kindness. To catch the nearest way.
சர்வர்: ஆமாம் எனக்கு நினைவிருக்கிறது.
கணேஷ்: எனக்கு சுத்தமா புரியல...
புரொபஸர்: மெக்பெத்திடம் சொல்வதாய் எண்ணி அவன் மனைவி சொல்கிறாள்: "நீ வீரமானவன் தான், ஆனால் உன் இதயம் கருணையால் நிரம்பியது. அதனால் உன்னால் மன்னனை எளிதில் கொல்ல முடியாது.' 
கணேஷ்: சொல்வதாய் எண்ணி என்றால் சொல்லவில்லையா?
புரொபஸர்: இல்லை. அவள் தனக்குத் தானே சொல்கிறாள். இதை soliloquy என்பார்கள். நீ தனக்குத் தானே பேசுவாயா?
கணேஷ்: ஆமா. நெர்வஸா இருக்கும் போது. சார் கடைசியில் என்ன ஆகும்? அவர் மன்னரைக் கொல்வாரா? Does he finally kill him?
புரொபஸர்:  Finally என்பதை விட இந்த இடத்தில் eventually சரியான வார்த்தை.
சர்வர்: இல்ல சார். It must be  eventually.
புரொபஸர்: உனக்கு எப்பிடித் தெரியும்? ஷட் அப்.
சர்வர்: ஓகே சார். Lets us hear it from the horse's mouth. ஜூலி... நீ சொல்லு.
(ஜூலி பக்கத்து மேஜையையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது)
ஜூலி: இரு இரு. அவங்க எழுந்து போறதுக்காக வெயிட் பண்றேன்.
சர்வர்: ஏன்?
ஜூலி: ஒரு மிளகாய் பஜ்ஜியை டிராப் பண்ணியிருக்காங்க. அவங்க போனதும் I will pick it and run away with that.
சர்வர்: Why do you seek leftover? இதுக்கு பதில் சொன்னாய் என்றால் உனக்கு ஒரு தட்டு நிறைய மிளகாய் பஜ்ஜி எடுத்து வரேன்.
ஜூலி (செருமியபடி): சரி
கணேஷ்: Leftover என்றால் எச்சில் உணவு தானே?
ஜூலி: ம்...ம்...ம்... Seconds தெரியுமா?
சர்வர்: ரெண்டாவது தடவை சாப்பாடு வாங்குறது?
ஜூலி: கரெக்ட். ஆனால் நான் குதிரை இல்லையே? பிறகு ஏன் என்கிட்ட கேட்கிறதுக்கு from the horse's mouth என்கிறீர்கள்?
புரொபஸர்: From the horse's mouth என்றால் from the highest authority என்று பொருள். உச்சபட்சமான இடத்தில் இருந்து மிகவும் நம்பத் தகுந்த தகவலைப் பெறுவதை from the horse's mouth என்பார்கள். உதாரணமாய், ஜெயலலிதா அப்பல்லோவில் ரொம்ப கவலைக்கிடமான நிலையில் இருந்த போது அவர் இறந்து விட்டார் என பல புரளிகள் கிளம்பின. அப்போது Apollo hospital management announced her demise officially. We had it from the horse's mouth. ஒரே நொடியில் புரளி உண்மையாக மாறியது. உனக்கு ஒன்று தெரியுமா? Demise என்பது இன்று ஒருவர் மரணமடைவதை கெளரவமாய் அதிகாரபூர்வமாய் சொல்வதற்கான சொல்லாக உள்ளது. 
18வது நூற்றாண்டுவது வரை அதன் பொருள் வேறாக இருந்தது. மரணமடைந்தவரின் சொத்துக்கள் உயில் வழியாக இன்னொருவருக்கு தரப்படுவதை transfer of property / estate through will அச்சொல் குறித்தது. இச்சொல்லின் மூலமான பிரஞ்சுச் சொல்லான demettre என்பதன் பொருளே put away / transfer என்பதாக இருந்தது. மரணத்திற்கு பின்னரே இது சாத்தியப்படும் என்பதால் சொத்துப் பரிமாற்றம் எனும் சொல்லே ஒரு கட்டத்தில் மரணத்துக்கான சொல்லாக மாறியது. 
ஜூலி: சரி... ஏன் என்னை குதிரை என்றீர்கள்?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com