வேலை...வேலை...வேலை...

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை 
வேலை...வேலை...வேலை...

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை
பதவி: ஏரியா சேல்ஸ் மேனேஜர்
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்பிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 8 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பதவி: டீம் லீடர்
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Gradutes
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓராண்டு முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Under Gradutes
தகுதி: பட்டப்படிப்பில் முதலாமாண்டு முடித்து இன்னும் முழு படிப்பையும் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறு நிதி நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேல்ஸ் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் - Freshers
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: மேலாளர்/ உதவி மேலாளர் - புராஸஸிங் 
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹெச். ஆர். ஆபரேஷன்ஸ் துறை/ எம்ஐஎஸ் துறை/ நிதித்துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் -500, டீம் லீடர்ஸ்-65, ஏரியா சேல்ஸ் மேனேஜர் -25
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரங்கள், மதிப்பெண் பட்டியல், அனுபவம் உள்ளிட்டவை அடங்கிய பயோ-டேட்டாவைத் தயாரித்து, salesforce.bob@bobcards.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது, எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்ற விவரத்தை நன்க்ஷத்ங்ஸ்ரீற் என்னும் இடத்தில் குறிப்பிட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.bobfinancial.com/documents/Recruitment-of-Sales-Executives-TLs-ASM-Processing-Staff-BFSL.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25-05-2018.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை
பதவி: சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ
காலியிடம்: 1
தகுதி: எம்.எஸ்சி (Botany / Biotechnology / Life Science / Biological Science) படித்திருக்க வேண்டும். NET/ CSIR/ UGC/ ICMR தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் (அல்லது) சம்பந்தப்பட்ட துறையில் இரண்டாண்டுகள் ஆய்வுப்பணி மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள், தங்களைப் பற்றிய விவரங்கள், சான்றிதழ்களின் நகல்கள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: Dr. P. Ponmurugan, Principal Investigator ICMR Project, Associate Professor, Department of Botany, Bharathiar University, Coimbatore - 641 046, Tamil Nadu.
மேலும் விவரங்களுக்கு: http://cdn.b-u.ac.in/recruitment/srf_botany_2018_2.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 25-05-2018.

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் வேலை 
பதவி: மெடிக்கல் ஆபிஸர்
காலியிடங்கள்: 445
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.5.2018

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை
பதவி: தோட்டக்காரர்
காலியிடங்கள்: 13
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, தோட்ட பராமரிப்பில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: வாட்ச்மேன்
காலியிடங்கள்: 10
தகுதி: ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ கைவிடப்பட்ட விதவைகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadutourism.org/ என்ற இணையதளத்தில் இருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதன்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண். 2, வாலாஜா சாலை, சென்னை- 600 002. 
மேலும் விவரங்களுக்கு: www.tamilnadutourism.org/pdf/Advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 28-05-2018 
தொகுப்பு: பிரவீண் குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com