என்ன பெயர் வைக்கலாம்... எப்படி வைக்கலாம்...!

இங்கிலாந்தைச் சேர்ந்த பியூ ஜேஸுப் . பதினாறு வயது சிறுமி . சீனக் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம்
என்ன பெயர் வைக்கலாம்... எப்படி வைக்கலாம்...!

இங்கிலாந்தைச் சேர்ந்த பியூ ஜேஸுப் . பதினாறு வயது சிறுமி . சீனக் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை நாற்பத்தெட்டு லட்சத்திற்கும் மேல் வருமானம் சம்பாதித்திருக்கிறார்.
 பியூ ஜேஸுப் சென்ற ஆண்டு தனது பெற்றோருடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அந்த சுற்றுலாவின் போது, சீன நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர், ஹலோ என் குழந்தைக்கு நல்ல ஆங்கில பெயர் ஒன்றை தேர்ந்தெடுத்து சொல்லம்மா .. என்று பியூ ஜேஸுப்பைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 பியூ ஜேஸுப், குழந்தைக்குப் பெயர் சூட்டியதும் அந்தப் பெண்மணி சிறிய தொகையை பியூ ஜேஸுப்பிற்கு அன்பளிப்பு செய்தார்.
 இந்த சம்பவம், பியூ ஜேஸுப்பின் மூளையில் பொறியினைக் கொளுத்திப் போட்டது. பெயர் சூட்டினால் பணம் கிடைக்குமா..?
 வருமானம் ஈட்டுவதற்கு இப்படியும் ஒரு வழி இருப்பதை உணர்ந்த பியூ ஜேஸுப், இங்கிலாந்து திரும்பியதும் ஒரு புதிய இணையதளத்தை தொடங்கினார்.
 இந்த இணையதளத்தில் சீனக் குழந்தைகளுக்குப் பொருத்தமான நல்ல ஆங்கில பெயர் தெரிவு செய்து தரப்படும் என விளம்பரம் செய்தார்.
 இப்போது சீனக் குடிமக்களில் பலருக்கும் தங்களது குழந்தைகளுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுவதில் ஆர்வம் அதிகமாக உள்ளது.
 ஆங்கில பெயர்களை சூட்டுவதன் மூலம் பிள்ளைகள் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் கல்வி பயில உதவியாக இருக்கும் என சீன மக்கள் கருதுவதுதான் இந்த ஆங்கிலப் பெயர் மோகத்திற்கு காரணம். பொதுவாக, சீனக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது அக்குழந்தையின் பன்னிரண்டு ஆளுமைப் பண்புகளில் ஐந்து குணாதிசயங்களை தெரிவு செய்து அவற்றின் அடிப்படையில் பெயரை சூட்ட வேண்டும்.
 இதே வழிமுறையை தான் நானும் பின்பற்றுகிறேன். குழந்தையின் குணாதிசயங்களுக்குத் தகுந்தவாறு மூன்று பெயர்களை தெரிவு செய்து அவற்றை பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் நான் பரிந்துரை செய்யும் மூன்று பெயர்களில், பெற்றோர் இறுதியாக ஒரு பெயரை தெரிவு செய்து தங்களது குழந்தைக்கு சூட்டுவார்கள்.
 இதுவரை பியூ ஜேஸுப் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சீனக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி, சுமார் 48 லட்சம் வருமானம்
 ஈட்டியுள்ளார்.
 - பனிமலர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com