சீரகத்தின் பயன்கள்!

சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் தீரும்.
சீரகத்தின் பயன்கள்!


* சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் தீரும்.
* சீரகத்துடன் உப்பைச் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ, அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்றுவலி நீங்கி
செரிமானம் ஏற்படும்.
* சீரகத்துடன் கல்கண்டை கலந்து மென்று
தின்றால் இருமல் நீங்கிவிடும்.
* சீரகப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
* சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகப் பொடியோடு எலுமிச்சைச்சாறு குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும். நல்லெண்ணெய்யில் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்தாலும் பித்தம் நீங்கிவிடும்.
* சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட்டு வர பசி கூடும்.
* சீரகத்தை மிளகுப் பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் அஜீர்ணம்
மந்தம் நீங்கும்.

சமையல் டிப்ஸ்...
* ஹோட்டல் சாம்பார் போன்று சாம்பார், மணமாக இருக்க, சாம்பாரை அடுப்பிலிருந்து இறக்குமுன்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கொஞ்சம்,  ஒரு பச்சை மிளகாய், ஒரு பல் பூண்டு நசுக்கி லேசாக எண்ணெய்யில் வதக்கி சாம்பாரில் கொட்டி, ஒரு கொதியில் இறக்குங்கள்.
* மணத்தக்காளி வற்றல் குழம்பை இறக்கிய
வுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் அதன் ருசியே அலாதிதான்.
* பனீர் தயாரிக்க கொதிக்கும் பாலில் எலுமிச்சைச் சாற்றுக்குப் பதிலாக தயிர் சேர்த்தால் கூடுதலாக பனீர் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com