மிஸ் இந்தியா!

மிஸ் இந்தியா'  போட்டி இந்தியாவில் ஃபெமினா இதழால் நடத்தப்படும் அழகுப் போட்டியாகும். இதில் அழகு, நடை உடை, பாவனை, புத்தி கூர்மை
மிஸ் இந்தியா!

"மிஸ் இந்தியா'  போட்டி இந்தியாவில் ஃபெமினா இதழால் நடத்தப்படும் அழகுப் போட்டியாகும். இதில் அழகு, நடை உடை, பாவனை, புத்தி கூர்மை ஆகியவையும்  சோதிக்கப்படும். முதன்முதலில் மிஸ் இந்தியா போட்டி உள்ளூர் பத்திரிகையாளர்களால் நடத்தப்பட்டது. இதன் மூலம் முதல் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் பிரமிளா ( எஸ்தர் விக்டோரியா ஆப்ரஹாம்) இதனை இவர் 1947- ஆம் ஆண்டு பெற்றார்.
அதையடுத்து, 1952 - ஆம் ஆண்டு இரண்டு இடங்களில் மிஸ் இந்தியா போட்டி நடந்தது. ஒன்று மும்பையில்.  மற்றொன்று முசோரியில். மும்பையில் இந்திராணி ரெஹ்மான்  வெற்றி பெற்றார். முசோரியில், நூடன் வெற்றி பெற்றார்.
* 1953- இல் மிஸ் இந்தியாவாக தேர்வு பெற்ற கன்வால் சினிமா நடிகையாக வலம் வந்தார். இடையில் சில ஆண்டுகள் நடக்கவில்லை. பின், 1959 -ஆம் ஆண்டு, Eve's Weekly இதழ் Miss India போட்டியை நடத்தியது.
* 1964 - இல் தான் Femina, Miss India போட்டியை துவக்கி நடத்தியது. இதில் மூன்றுபேர் தேர்வு பெற்றனர். இந்த மூவரில் ஒருவர்  மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கும், இரண்டாமவர் மிஸ் ஆசியா பசிபிக் போட்டிக்கும், மூன்றாமவர் இன்டர்நேஷனல் டீன் பிரெசென்ஸூக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
* ஜீனத்அமன் மிஸ் இந்தியாவாக தேர்வு பெற்றதுடன், அடுத்து மிஸ் ஆசியா பசிபிக் போட்டியிலும், மனிலாவில் வென்றார்.
* 1994- இல் சுஷ்மிதாசென். மிஸ் இந்தியா மற்றும் மிஸ்யுனிவர்ஸ் பட்டங்களை வென்றார். மிஸ்யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதே 1994- இல் தான் ஐஸ்வர்யாராயும் மிஸ்வேர்ல்டு பட்டத்தை வென்றார். இரண்டு பேருமே இந்திப் படவுலகிலும் நுழைந்தனர். தமிழ்ப் படவுலகிலும் நுழைந்தனர்.
* 1997 - இல், டயானா ஹைடன், மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்டு பட்டங்களை வென்றார்.
* 1999 - இல் யுக்தாமுகி மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் பட்டங்களை வென்றார்.
* 2000 - ஆம் ஆண்டில் இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், மூன்று  பட்டங்களை கூடுதலாக வென்று சாதித்தனர்.லாரா தத்தா - மிஸ் யுனிவர்ஸ், பிரியங்கா சோப்ரா - மிஸ் வேர்ல்டு, தியா மிர்சா - மிஸ் ஆசியா பசிபிக் இதே போன்று மூன்று பட்டங்களையும் வென்ற நாடு ஆஸ்திரேலியா மட்டுமே.
* 2010 - இல் நிக்கோல் ப்ரியா மிஸ் இந்தியா மற்றும் வியட்நாமில் நடந்த மிஸ் எர்த் (Miss Earth) போட்டிகளில் வென்றார்.
* 2012- இல் ஹிமாங்கனி, மிஸ் இந்தியா மற்றும் மிஸ் ஆசியா பசிபிக் வேர்ல்டு போட்டிகளில் வென்றார்.
* 2013 -இல் ஸ்ரீ ருஸ்டி ரானா மிஸ் இந்தியா  மற்றும் மிஸ் ஆசியா பசிபிக் வேர்ல்டு போட்டிகளில் வென்று, இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றது என்ற சிறப்பை பெற்றார்.
* 2014 -இல் ஃபெமினா இதழ் கூடுதலாக மிஸ் திவா (Miss Diva ) என்ற பட்டத்தையும் வழங்கலாயிற்று. இதனை வென்ற ஆஷாபட், மிஸ் திவா சுப்ரேஷால் பட்டத்தையும் வென்றார். இதே 2014 - இல் தேர்வு செய்யப்பட்ட ஸ்வேதா ராஜ் - மிஸ் ஆசியா பசிபிக் உலக பட்டத்தையும் வென்றார்.

இதுவரை  இவர்களில்  உலக அளவில் சாதித்தவற்றை எண்ணிக்கையில் பார்ப்போம்:
மிஸ் வேர்ல்டு - 5 , மிஸ் யுனிவர்ஸ் - 2 , மிஸ் எர்த் - 1, மிஸ் சூப்ரேஷனல் - 1, மிஸ் யூனிவர்சல் பீஸ் ( Peace) & ஹுமானிட்டி
( Humanity) - 1, மிஸ் பசிபிக் வேர்ல்டு - 3, மிஸ் டூரிசம் - 2, மிஸ் டீன் ஏஜ் இன்டர்கான்டினென்டல் - 1, மிஸ் வேர்ல்டு ஆம்பர் - 1, இன்டர்நேஷனல் டீன் பிரின்ஸ் - 1
இதுவரை வருட அடிப்படையில், உலக அளவில் இந்திய அழகிகள் பெற்றபட்டங்கள்.
1978 -2, 1994 - 2, 2000 - 3, 2014 - 2 உலக அளவில், இந்திய அழகிகள் பங்கு கொண்டதின் மூலம், உலகிற்கு இந்திய பெண்களின் கொள்ளை அழகு, வெட்ட வெளிச்சமாகியது. இதன் மூலம் இன்று பிரியங்கா சோப்ரா உட்பட பல அழகிகள் நடிகைகள்... ஹாலிவுட் படங்களில் வாய்ப்பு பெற்று பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com