வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி?

ஃபேஷியல் செய்வதற்கு முன்பு  முதலில்  முகத்தை கிளினசிங் செய்யவேண்டும்.    இதற்கு, முகத்தை நன்கு கழுவிவிட்டு பிறகு  ஒரு சிறிய  பஞ்சில்  பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்  
வீட்டிலேயே ஃபேஷியல் செய்வது எப்படி?

ஃபேஷியல் செய்வதற்கு முன்பு  முதலில்  முகத்தை கிளினசிங் செய்யவேண்டும்.    இதற்கு, முகத்தை நன்கு கழுவிவிட்டு பிறகு  ஒரு சிறிய  பஞ்சில்  பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்  அல்லது  பாதாம் எண்ணெய் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்யலாம். 

அடுத்து,  முகத்தை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு,  சிறிதளவு  சக்கரை எடுத்துக் கொண்டு அத்துடன்  தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்ட வடிவில் 3 - 5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும்.  இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும். 

பின்னர், வாழைப்பழம் அல்லது பப்பாளிப்பழத்தை அரைத்து அதனை முகத்தில் இட்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.  

பிறகு,  ஒரு பாத்திரத்தில் தண்ணீரை  கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள், துளைகளில் தங்கிய அழுக்குகள் நீங்கும். அதன் பிறகு, முகத்திற்கு "பேக்' போட   உங்களுக்கு  விருப்பமுள்ள எந்த பழத்தை  வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  உதாரணமாக,
* தக்காளியை எடுத்து நன்றாக அரைத்து, அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூச வேண்டும்.  20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். 
* ஆப்பிளை நன்றாக அரைத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
* வாழைப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். 
* டோனிங் மற்றும் மாய்சுரைசிங் செய்ய  வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறோ அல்லது ரோஸ் வாட்டரோ எடுத்துக் கொண்டு பஞ்சில் நனைத்து  முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது,   இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது,  சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது,  இளமையான தோற்றத்தைப் பாதுகாக்கிறது.
- ஸ்ரீதேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com