கிருஷ்ணஜெயந்தி சீடை டிப்ஸ்...

ஊறவைத்து, களைந்து ஆறவிட்ட பச்சரிசியை அரைக்கும் முன்  வாணலியில் இட்டு லேசாக வறுத்து அரைக்க சீடை   கரகரப்பாக வரும்.
கிருஷ்ணஜெயந்தி சீடை டிப்ஸ்...

• ஊறவைத்து, களைந்து ஆறவிட்ட பச்சரிசியை அரைக்கும் முன்  வாணலியில் இட்டு லேசாக வறுத்து அரைக்க சீடை   கரகரப்பாக வரும்.

• சீடைக்கு வெண்ணெய் போட்டுதான் பிசைய  வேண்டும் என்று இல்லை, தேங்காய் எண்ணெய்விட்டு பிசைந்தாலும் சீடையின் ருசி இரட்டிப்பு ஆகும்.

• சீடைக்குப் போடும் தேங்காய்த் துருவலை அப்படியே போடாமல் தேங்காய் சாதத்திற்கு வறுப்பதுபோல் சிறிது பொன் நிறத்தில் வறுத்துப் போட்டு சீடையை  உருட்ட சீடை நன்றாக வரும்.

• சீடைக்கு அரைக்கும் அரிசியை மிகவும் நைஸôக அரைக்காமல், சற்று "நறநற'வென்று அரைத்து சீடை செய்தால் சீடையை வாயில் போட்டவுடன் கரைந்துவிடும்.

• ஓர் ஆழாக்கு அரிசிக்கு ஒரு தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுத்தம்பருப்பு மாவு சேர்த்து சீடை செய்ய  சீடை நன்றாக வரும்.

• சீடை உருட்டும்போது அழுத்தமாக உருட்டாமல் லேசாக உருட்டினால் போதும்

• உருட்டிய சீடைகளை சிறிது நேரம் ஃபேன் காற்றில் ஆறவிட்டு எண்ணெய்யில் போட ஒன்றோடென்று ஒட்டிக் கொள்ளாமலும், வெடிக்காமலும் இருக்கும்.

• அரைத்து வந்த மிஷின் மாவை ஆறியபின் சலித்து சீடை செய்தாலும் வெடிக்காமல் இருக்கும்.

• எண்ணெய் சூடான பின் சீடைகளைப் போட்டு "சிம்'மில் வைத்தால் நன்றாக வெந்து ருசியும்  சூப்பராக இருக்கும்.

• சீடையை   உருட்டிப்போட வெள்ளை காட்டன் வேட்டியை உபயோகப்படுத்தினால், அந்த துணி சீடையின் உள்ளிருக்கும் நீரை உறிஞ்சிக் கொண்டு சீடையைக் காய வைக்கும்.
- சுகந்தாராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com