கறிவேப்பிலை இருக்க, கவலை எதற்கு?

வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை அரைத்து உருண்டையாகச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
கறிவேப்பிலை இருக்க, கவலை எதற்கு?

டிப்ஸ்... டிப்ஸ்...

• வாரம் ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை அரைத்து உருண்டையாகச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.

• கறிவேப்பிலையை அரைத்து வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தாலும் இளநரை மறையும்.

• தேநீர் தயாரிக்கும்போது அதில் ஒன்றிரண்டு கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் குடிக்க, சுவையும் வாசனையும் தூக்கலாக இருக்கும்.

• கறிவேப்பிலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் முகப்பரு குறையும்.

• கறிவேப்பிலையை மென்று விழுங்கினால் வாய்ப்புண் ஆறும்.

• கறிவேப்பிலையை மென்று தின்றால் நன்றாகப் பசி எடுக்கும்; உடல் வலுப்பெறும்; வாயுவையும் வெளியேற்றும்.

• கறிவேப்பிலையுடன் சிறிது சீரகம், வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து குடித்து வந்தால் பித்தச்சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.

• 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாறெடுத்து, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் போகும் வரைக் காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.

• தினமும் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை இலைகளை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர சர்க்கரை நோயால் உடல் கனமாவது குறையும்.

• இரும்புச்சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள கறிவேப்பிலை ரத்தசோகையைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலையை இனிமேல் சாப்பிடும்போது தூக்கிப் போடாதீர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com