கிறிஸ்துமஸும் விருந்தும்!

போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு "ஓப்லாட்கி' என்ற பெயரில் வேஃபர் பிஸ்கெட்டுகளைத் தயாரிப்பார்கள்.
கிறிஸ்துமஸும் விருந்தும்!

• போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு "ஓப்லாட்கி' என்ற பெயரில் வேஃபர் பிஸ்கெட்டுகளைத் தயாரிப்பார்கள். இதனை பரிசுப் பொருளாகவும் அனுப்புவர். கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் போலவும் கூட இந்த பிஸ்கெட்டுகளை அனுப்புவது உண்டு. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் மாலை குடுபத்துடன் வேஃபர் பிஸ்கெட்டுகளை வைத்து பிரார்த்தனை செய்வார்கள். கிறிஸ்துமஸ் இரவில் முதல் நட்சத்திரம் தோன்றியதும் "ஓப்லாட்கி' பிஸ்கெட்டுகளை பிட்டு மற்றவர்களுக்கு வழங்கி வாழ்த்து கூறுவார்கள்.

• "டர்டே' என்பது விசேஷமான கேக். பல மடிப்புகளோடு கூடியதாக இருக்கும். குழந்தை இயேசுவை எப்படி பல மடிப்புகளுடைய துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்தாரோ அதை இந்த கேக் நினைவுறுத்துவதாக ஐதீகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது "டர்டே' கேக்குகளை தயாரித்து உண்டு மகிழ்வார்கள் ருமானியர்கள்.

• ஜெர்மனியில் "ஜிஞ்சர் பிரட்மென்' (இஞ்சிச்சாறு சேர்ந்த ரொட்டிகள்) மற்றும் பல்வேறு பொருள்களால் ஆன குக்கீஸ் ரொட்டிகளை கிறிஸ்துமஸ் விருந்துக்கு தயாரிப்பார்கள். இதற்கு "பெர்னஸி' என்று பெயர். இதுதவிர, பாதாம் மாவில் சர்க்கரை சேர்த்து குழைத்து காய்கறிகள், பழ வகைகள், பல்வேறு விநோத உருவங்களைப் போல் செய்து உண்பது ஏற்றபடி பக்குவம் செய்து வைப்பார்கள். இதற்கு "மார்ஸிபென்' என்று பெயர்.

• பின்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே வீட்டுத் தலைவிகள் ஓட் தானியத்தைக் குத்திப் புடைத்து அரைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அங்கு புனித ஸ்டீபன் தினம் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. அன்று ஓட்ஸ் கஞ்சி விசேஷ விருந்துப் பொருள். இதற்கு "செயின்ட் ஸ்டீபன்ஸ் டே போரிட்ஜ்' என்று பெயர்.

• கிறிஸ்துமஸ் புனித இரவின் முக்கியத்துவத்தைக் குறிக்க முதல் நாள் மாலையில் சாலட் பட்சணங்களை விசேஷமாக தயாரிப்பார்கள் மெக்ஸிகோ நாட்டினர். ஏராளமான பழ வகைகள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதில் வண்ண மிட்டாய்களைக் கொண்டு அலங்கரித்திருப்பர்.
- ஆர்.மீனாட்சி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com